சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

முக்கோண காதல் கதையில் சூப்பர் ஹிட்டான படங்கள்.. வயிறுவலிக்க சிரிக்க செய்த ரஜினி, கமல்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவரசையமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற முக்கோண காதல் கதைகளை கொண்ட படங்களின் லிஸ்டை காணலாம்.

ரெட்டைவால் குருவி: பாலுமகேந்திரா படங்கள் என்றாலே உறவுகளை மையப்படுத்தியே இருக்கும். இந்த படத்தில் மைக் மோகன் நாயகன். அவருக்கு ஜோடிகளாக நம்ம சித்தி ராதிகா மற்றும் அர்ச்சனா. இந்த படத்தில் நம்ம மோகன் இருவரையும் லவ்வோ லவ்வுன்னு லவ்ஸ் பண்ணுவார் பாருங்க, நமக்கே அந்த ஆசை வந்துரும். இந்த படத்தின் மிகப்பெரும் ஹிட்டுக்கு காரணம் இளையராஜா என்றால் அது மிகை அல்ல. அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.

வீரா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் தான் ரஜினி-இளையராஜா காம்போவில் வந்த கடைசி திரைப்படம். இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு நாயகிகள். முதலாவதாக மீனா; அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து ரோஜாவை திருமணம் செய்துகொள்வார். பிறகு இரண்டு மனைவிகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு இவர் படும் அல்லல்களை படம் முழுக்க ரசிக்கலாம். பெரிய வெற்றி பெற்றது இந்த படம்.

நினைத்தேன் வந்தாய்: தளபதி விஜய் – ரம்பா – தேவயானி நடித்திருந்த இந்த முக்கோண காதல் கதையை இயக்கி இருந்தார் செல்வபாரதி. படத்திற்கு இசை நம்ம தேனிசை தென்றல் தேவா. கனவில் வரும் பெண்ணை நேரில் சந்திக்கும் நாயகன், அவளது அக்காவுக்கு நிச்சயிக்க படுகிறார். பின்னர் இந்த முக்கோண காதல் என்னவானது என்பது மீதிக்கதை. இந்த படத்தில் தேவயானிக்கு தான் நடிக்க ஸ்கொப். அவரும் சிறப்பாக நடித்திருந்தார். அந்த ரம்பாவின் இடுப்பு மச்சத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

நாமிருவர் நமக்கிருவர்: சுந்தர் சி இயக்கத்தில் பிரபுதேவா, மீனா, மகேஸ்வரி நடித்திருந்த இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தார் கவர்ச்சி புயல் ரம்பா. அவரது கால்சீட் பிரச்சனை காரணமாக மீனா உள்ளே வந்தார். இந்த படத்தில் அவர் கவர்ச்சி வேடம் ஏற்றிருந்தார். பிரபு, தேவா என்று இரண்டு பெயரில் இருவரை காதலிக்கும் கதையாக வந்திருந்தது படம். நல்லதொரு வெற்றியை இந்த படம் பதிவு செய்தது.

12B: நடிகர் ஷாம் துணை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர். முதல் படமான 12B யிலேயே அப்போதைய முன்னணி நடிகைகளான சிம்ரன், ஜோதிகா வுடன் இணைந்து நடித்தார். அந்த படம் நன்றாக போனது. இரண்டு நாயகிகளுடன் டூயட் செய்யும் கதையில் பாடல்கள் நன்றாக அமைந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க மறைந்த ஜீவா இயக்கி இருந்தார்.

ஜே ஜே: சாக்லேட் பாயாக வளம் வந்த மாதவன் அமோக, பூஜா என்று இரண்டு அழகிய கதாநாயகிகளை ரொமான்ஸ் செய்யும் படம் தான் ஜே ஜே. இந்த படத்திற்கு தரமான இசையை கொடுத்திருந்தார் பரத்வாஜ். இயக்கம் அவரது ஆஸ்தான சரண். நல்லதொரு ஹிட்டை பதிவு செய்த இந்த படத்தில் மறைந்த கலாபவன் மணி நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

காத்துவாக்குல ரெண்டு காதல்: சமீபத்தில் வந்த இந்த முக்கோண காதல் கதையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என்று அருமையான கவர்ச்சி கூட்டணி. படத்திற்கு இசை ட்ரெண்டிங்கில் இருக்கும் அனிருத். இயக்கம் விக்னேஷ் சிவன். இதற்கு மேல் ஒரு கூட்டணி வேண்டுமா? இரண்டு நாயகிகளை நன்றாக ரொமான்ஸ் செய்தார் நம்ம விஜய் சேதுபதி. நல்லதொரு ஹிட்டை இந்த படம் பதிவு செய்தது.

- Advertisement -

Trending News