லோ பட்ஜெட்டில் வசூல் வேட்டையாடிய 10 படங்கள்.. அசால்டா அடித்த ஜாக்பாட்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் மற்றும் திறமையான இயக்குனர்கள் கருத்து சார்ந்த திரைப்படங்களை குறைந்த பட்ஜெட்டில் தயாரித்து தரமான படங்களாக தந்துள்ளார்கள். தமிழ்த் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் செய்த திரைப்படங்களை பார்க்கலாம்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி: சிம்புதேவன் இயக்கத்தில் 2006 இல் வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. நகைச்சுவை மன்னனாக வலம் வந்த வடிவேலு கதாநாயகனாக நடித்த முதல் படம் இது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 15 கோடி வசூல் செய்தது.

சந்திரமுகி: பி வாசு இயக்கத்தில் 2005ல் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் என பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சந்திரமுகி படம் 19 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் இப்படம் 45 கோடி வசூல் செய்திருந்தது. வெளிநாடுகளில் 30 கோடி வசூல் செய்து உலகம் முழுவதும் சேர்த்து 75 கோடி வசூல் செய்தது.

கோலி சோடா: விஜய் மில்டன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலிசோடா. ஸ்ரீராம், கிஷோர், தமிழ், இமான் அண்ணாச்சி மதுசூதனன் ராவ் ஆகியோர் இப்படத்தில் நடித்து இருந்தனர். கோலிசோடா படம் 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படத்தின் பட்ஜெட்டை விட நான்கு மடங்கு அதிகமாக 8 கோடி வசூல் செய்தது.

கில்லி: தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. கபடியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் வேட்டையாடியது. 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கில்லி படம் 38 கோடி வசூல் செய்தது. விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தனி ஒருவன் : மோகன் ராஜா இயக்கத்தில் 2015-ல் வெளியான திரைப்படம் தனி ஒருவன். ஜெயம் ரவி கதாநாயகனாகவும், அரவிந்த்சாமி வில்லனாக நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தனி ஒருவன் படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 105 கோடி வசூல் செய்துள்ளது.

மங்காத்தா : வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011இல் வெளியான திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், லட்சுமி ராய், வைபவ், அஞ்சலி, ஆண்ட்ரியா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அஜித் படங்களிலேயே மங்காத்தா பிரமாண்ட வெற்றியை தந்தது. இப்படம் 24 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 130 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

சிங்கம்: சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் திரைப்படம் சிங்கம். ஹரி இயக்கத்தில் உருவான இப்படத்தை கே இ ஞானவேல் தயாரித்திருந்தார். சிங்கம் படம் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 90 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட்டது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: பொன்ராம் இயக்கத்தில் 2013ல் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயன் நடிப்பில் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். அவருடைய பாடல்களும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இப்படம் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 48 கோடி வசூல் செய்தது.

கைதி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. ஒரே இரவில் நடக்கும் கதையாக இப்படம் எடுக்கப்பட்டது. கார்த்தி படங்களில் அதிக வசூல் செய்த படமாக கைதி படம் உள்ளது. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 86 கோடி வசூல் செய்துள்ளது.

திரௌபதி: மோகன்ஜி இயக்கத்தில் 2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி. இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, சீலா ராஜ்குமார் மற்றும் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஆணவக்கொலை பற்றி ஒரு புதிய சம்பவத்தை இந்தப் படத்தில் கதையாக இருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வெறும் 60 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 20 கோடி வசூல் செய்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்