ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுத்த 6 தமிழ் படங்கள்.. அறிவியல் சார்ந்த கதைகளை வைத்து வெற்றி கண்ட இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் ஹாலிவுட் சினிமாவிற்கே டஃப் கொடுத்த தமிழ் நாயகர்கள் ஒரு திரைப்படம் வெளியாகி விட்டால் அதனை மற்றொரு திரைப்படத்தோடு ஒப்பிட்டு பேசுவதில் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கை தேர்ந்தவர்கள். அப்படி நம் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் ஹாலிவுட்டில் காப்பி செய்யப்பட்டு எடுத்த திரைப்படங்கள் மற்றும் அந்த வகையில் ஹாலிவுட்டுக்கே டப் கொடுக்கும் அளவில் பல டெக்னாலஜியை பயன்படுத்தி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்கள் பல தமிழில் வெளியாகியுள்ளன.

எந்திரன்: 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பர். சிட்டி ரோபோ இன்றுவரை பலருக்கும் பிடித்தமான ரோபோவாக ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் நடித்திருப்பார். ரோபோக்களுக்கு மனிதர்கள் போல் உணர்வுகள் வந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி இப்படத்தின் கதை நகரும். இத்திரைப்படத்திற்கு சிறந்த எடிட்டிங்கான தேசிய விருதும் கிடைத்தது.

Also Read : ரஜினிக்கு நன்மை செய்த எம்.ஜி்.ஆர்.. மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்

2.0: 2018ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் எந்திரன் திரைப்படத்தின் பாகம் 2 ஆகும். இப்படத்தில் எமி ஜாக்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இப்படத்தின் கதை அமைந்திருக்கும். ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் 3டி அனிமேஷன் முறையை ஷங்கர் இப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

ஏழாம் அறிவு : இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து இருப்பார். சீன நாட்டினரால் பரவி விடப்பட்ட வைரசை பரவாமல் காக்க பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த போதிதர்மனின் டி.என்.ஏ முறையை பயன்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை நகரும்.

Also Read : எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது, அடுத்தடுத்து 3 மரணங்கள்.. பட வாய்ப்பிற்காக டாப் நடிகை கடந்து வந்த சவால்கள்!

தசாவதாரம்: 2008ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் 10 வேடங்களில் கமலஹாசன் நடித்திருப்பார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில், பயோ வெப்பன் என்று சொல்ல கூடிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்த வைரஸை தவறாக பயன்படுத்த நினைக்கும் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற போராடும் சயின்டிஸ்ட்டாக கமலஹாசன் நடித்திருப்பார்.

மாநாடு: நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் டைம் லூப் என்று சொல்லப்படும், ஒரே விஷயம் திரும்பத் திரும்ப ஒரு நபருக்கு நடக்கும் சயின்ஸ் பிக்ஷன் கதையாக இப்படம் உருவாகியிருக்கும். இதனை நாயகன் கையாண்டு மிகப்பெரிய மாநாட்டில் இருந்து அரசியல் தலைவரை மரணத்திலிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதை.

இன்று நேற்று நாளை: நடிகர் விஷ்ணு விஷால் நடித்த இத்திரைப்படத்தில் நாயகன் டைம் மெஷினை பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்சினைகளையும், அதை வைத்தே தனது பிரச்சினைகளைத் எப்படி யோசித்து தீர்த்துக் கொள்கிறார் என்பதே இப்படத்தின் கதை. எது நடக்கிறதோ அது சரியான நேரத்தில் தான் நமக்கு நடக்கிறது என்ற சூப்பரான வசனமும் இபபடத்தில் இடம்பெற்றிருக்கும்.

Also Read : ராமராஜன் மறுத்த 5 இரண்டாம் பாக படங்கள்.. விஜய் மில்டனை விரட்டியடித்த வில்லுபாட்டுகாரன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்