தமிழ் சினிமாவில் வாழ்க்கைக்கு உத்வேகம் கொடுக்கும் கதை அம்சம் கொண்ட சிறந்த 8 தமிழ் திரைப்படங்கள்.. அதுவும் ஆண்டவர் வேற லெவல்

வணக்கம் சினிமாபெட்டை வாசகர்களே. நமது சினிமா பேட்டை வலைதளம் மூலமாக பல சிறப்புக் கட்டுரைகளை தொடர்ந்து கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு தமிழ் சினிமாவில் வாழ்க்கைக்கு உத்வேகம் கொடுக்கும் கதை அம்சம் கொண்ட சிறந்த 8 தமிழ் திரைப்படங்கள். இங்கு வரிசைப்படுத்தப்பட்ட இருக்கும் படங்களை தவிர மேலும் பல தமிழ் சினிமா இந்த லிஸ்டில் இடம் பெறலாம். அது தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.

ஆறிலிருந்து அறுபது வரை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து எஸ்பி முத்துராமன் அவர்கள் இயக்கிய இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களும் முதல் முதியவர் வரை திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கும். கதைப்படி வாழ்க்கையில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து தம்பி தமிழர்களுக்காக எப்படி தனது கல்வி, வாழ்க்கையை விட்டுக்கொடுத்து வாழ்ந்தார் என்பதை சிறப்பாக படமாக எடுத்திருந்தார்கள். பணம் இல்லாத அண்ணனை அவரது சகோதர சகோதரிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை இந்த திரைப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருந்தது. ஒரு மனிதன் எவ்வளவு பெரிய தோல்வி கண்டாலும் மனம் தளரக் கூடாது என்பதற்கு இந்த திரைப்படம் நல்லதொரு உதாரணம்.

உன்னால் முடியும் தம்பி: இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன், சீதா, ஜனகராஜ், ஜெமினி கணேசன், மனோரமா மற்றும் பலர் நடித்த திரைப்படம் உண்ணல் முடியும் தம்பி. இந்த திரைப்படத்தில் கர்நாடக இசைக் கச்சேரி பாடகர் ஜெமினி கணேசன் மகனாக கமல்ஹாசன் வருகிறார். அவருக்கு கர்நாடக சங்கீதத்தை காட்டிலும் சமுதாய சீர்திருத்தமும் மிகவும் பிடித்ததாக இருக்கிறது. இதன் காரணமாக தந்தையின் கோபத்துக்கு ஆளாகி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டு, ஊர் மக்களின் நலனுக்காக பாடுபடுவதாக கதை அமைகிறது. கர்நாட சங்கீதம் உயர்ந்தது என்று கருதும் ஜெமினி கணேசன் எப்படி சமுதாய சீர்திருத்தம் செய்து வரும் தனது மகனை ஏற்றுக் கொள்கிறார் என்பது கதையின் முடிவு. இன்றைய இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை அப்போது சொன்ன திரைப்படம் என்றால் அது மிகையல்ல.

முகவரி: தல அஜித் குமார், ரகுவரன், ஜோதிகா மற்றும் பலர் இணைந்து நடித்த திரைப்படம் முகவரி. இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வரும் இளைஞராக அஜித்குமார் நடித்துள்ளார். பல வருடங்களாக இந்த முயற்சியை செய்து கொண்டிருக்கும் அவருக்கு உறுதுணையாக அவரது குடும்பம் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் தனது கொள்கைக்காக தனது காதலியான ஜோதிகாவையும் விட்டுக் கொடுக்கிறார் நாயகன். இறுதியில் தன்னை தாங்கிப் பிடித்த குடும்பத்திற்காக தன் கொள்கையை விட்டுக் கொடுத்தாரா இல்லையா என்பதைக் கூறுவதுடன் திரைப்படம் முடிகிறது. நிச்சயம் இன்றைய இளைஞர்களுக்கு வேண்டிய ஒரு நல்ல திரைப்படம்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்: மீண்டும் ஒரு உலக நாயகன் கமல்ஹாசன் திரைப்படம். பொதுவாக இந்த வரிசையில் அன்பே சிவம் நிச்சயமாக இடம் பெறும். நாம் புதிய முயற்சியாக இந்த திரைப்படத்தை இந்த வரிசையில் வைக்கிறோம். நகைச்சுவை அதிகமாக கொண்ட இந்த திரைப்படத்தில் வட்டி வசூல் செய்யும் ரவுடியாக வரும் கமல் ஹாசன் காதலுக்காக கல்லூரி சென்று அங்கு அனைவருக்கும் அன்பை போதிக்க பழகுகிறார். தனது கட்டிப்பிடி வைத்தியம் மூலமாக பலரது மனதிலும் இடம் பிடிக்கிறார். எதற்கும் உதவாத ஆனந்த் சாரையும் தனது அன்பால் கரைத்து எழ வைக்கிறார். மனதுக்கு இனிய பாடல்களைக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குனர் சரன் இயக்கியிருந்தார். முன்னாபாய் எம்பிபிஎஸ் என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது

சூரரைப் போற்று: சூர்யா நடிப்பில் முதன் முறையாக OTT யில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் சூரரைப் போற்று. நெடுமாறன் ராஜாங்கம் எனப்படும் விமான அதிகாரி எப்படி தனது சொந்த விமான நிறுவனத்தை நிறுவினார் என்பதை விவரிக்கிறது திரைக்கதை. இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். நாயகன் எவ்வளவு துன்பங்களுக்கு இடையில் இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக துவங்கினார் என்பதை நேர்த்தியான திரைக்கதை மூலம் கூறி இருந்தனர். இயக்கம் சுதா கொங்கரா.

கனா: பெண்கள் கிரிக்கெட்டில் முன்னேறத் துடிக்கும் இளம் பெண்ணின் வாழ்க்கையை அழகாக படம் பிடித்துக் காட்டியது இந்த திரைப்படம். கனா திரைப்படத்தை தயாரித்ததுடன் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். ஐஸ்வர்யா ராஜேஷ் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக சிறப்பாக நடித்திருந்தார். சத்யராஜ் முக்கியமான வேடத்தில் ஐஸ்வர்யாவின் தந்தையாக நடித்திருந்தார். நல்ல வெற்றியை இந்த திரைப்படம் பதிவு செய்தது மேலும் பல பெண்களுக்கு இந்த திரைப்படம் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக அமைந்தது.

சார்பட்டா பரம்பரை: குத்துசண்டை மீது அலாதிப் பிரியம் கொண்டவராக ஆர்யா நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரத்துக்காக அவர் தனது உடலை மெருகேற்றி உண்மையான குத்து சண்டை வீரர் போலவே தயார் படுத்தி இருந்தார். சென்னையில் அப்போது இயங்கிவந்த சார்பட்டா பரம்பரை இடியப்ப பரம்பரை இருவருக்கும் இடையேயான குத்துச்சண்டை மோதல்தான் இந்த திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தை மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கியிருந்தார். 70களில் நடக்கும் திரைப்படம் என்பதால் அந்த காலகட்டத்தை கண்முன் கொண்டு வந்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பழைய சென்னை நகரத்தை சிறப்பாக காண்பித்து இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது இதன் மூலம் ஆர்யாவின் திரை வாழ்க்கை மீண்டும் பிரகாசமாக தொடங்கியுள்ளது.

மொழி: ஜோதிகா பிரித்திவிராஜ் பிரகாஷ்ராஜ் சொர்ணமால்யா மற்றும் பலர் இணைந்து நடித்த திரைப்படம் மொழி. இயக்குனர் ராதாமோகன் இந்த திரைப்படத்தை நகைச்சுவையுடன் கூடிய நல்லதொரு திரைப்படத்தை கொடுத்தார். கதைப்படி வாய்பேச காதுகேளாத ஜோதிகா மற்ற மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கிறார். அவர் மீது காதல் வயப்படும் பிரித்திவிராஜ் அவரது குறைகளை ஒரு பொருட்டாக கருதாமல் அவருடன் வாழ ஆசைப்படுகிறார். நேர்த்தியான திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் எம்எஸ் பாஸ்கர் அவர்கள் பழைய நினைவுகளில் வாழும் சிறப்பு தோற்றத்தில் அருமையான நடித்திருந்தார். நிச்சயம் ஒருமுறை பார்க்க வேண்டிய திரைப்படம் இது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்