மாடல் அழகியாக கால்பதித்து தெலுங்கு திரையுலகின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் தான் டாப்ஸி பண்ணு. இவர் தமிழில் ‘ஆடுகளம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டாப்ஸி பணியாற்றிவருகிறார். தற்போது பாலிவுட்டில் பாய் போட்டு படுத்து இருக்கும் டாப்ஸி அங்கு பல ரசிகர்களையும் கவர்ந்து வைத்திருக்கிறாராம்.
இந்த நிலையில் டாப்ஸி மற்றும் அனுரக் கஷ்யப் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் பல கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அதாவது மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பல விவசாய சங்கங்கள் போராடி வருகின்றனர். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல நடிகர், நடிகைகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சட்டங்களுக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்து இருந்தார். இது ஒருபுறமிருக்க கடந்த புதன்கிழமை நடிகை டாப்ஸியின் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டதாகவும், அதேபோல் இயக்குனர் அனுராக் கஷ்யப் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறியதால் தான் டாப்ஸியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் டாப்ஸியிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், அனுராக் வீட்டில் ரூபாய் 20 கோடியும், தயாரிப்பு நிறுவனமான பேன்டோம் நிறுவனத்தில் ரூபாய் 350 கோடிக்கு மேலான கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து சோதனைகள் நடைபெறும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சோதனை டாப்ஸி, அனுராக், விகாஸ் ஆகியோரின் இடங்களையும் சேர்த்து மொத்தம் 22 இடங்களில் நடத்தப்பட்டதாக தெரிகிறது.