புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஷூட்டிங் ஸ்பாட்டில் சத்யராஜை வெளுத்து வாங்கிய டி.ஆர்.. கடுப்பாகி 2 நாள் எஸ்கேப் ஆன சம்பவம்

Sathyaraj-T.Rajendar: ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தான் சத்யராஜ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார். தற்போது அப்பா ரோல்களில் கலக்கிக் கொண்டிருக்கும் இவரை ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் டி ராஜேந்தர் வெளுத்து வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

ஆல் இன் ஆல் அழகுராஜாவாக கலக்கி கொண்டிருக்கும் டி ராஜேந்தர் இயக்கத்தில் 1983ல் தங்கைக்கோர் கீதம் என்ற படம் வெளிவந்தது. அதில் சத்யராஜுக்கும் அவருக்கும் ஒரு சண்டைக் காட்சி இருக்கும். அது படமாக்கப்படும் போது தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

Also Read: சத்யராஜின் இந்த பிளாப் படத்தின் கதையை சுட்ட அட்லி.. ஜவானால் தலைவலியில் ஷாருக்கான்

அதாவது ஆர்வக்கோளாறில் டி ராஜேந்தர் உண்மையாகவே சத்யராஜை அடி வெளுத்து விட்டாராம். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அவர் நிலைகுலைந்து போயிருக்கிறார். அதைத்தொடர்ந்து எதற்காக இப்படி அடிக்கிறீர்கள். நானும் மனிதன்தானே, மாஸ்டர் சொல்லிக் கொடுத்த மாதிரி நடிக்க முடியாதா என்று சத்யராஜ் திட்டி தீர்த்து விட்டாராம்.

உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறியும் இருக்கிறார். அதன் பிறகு இரண்டு நாட்கள் ஷூட்டிங் ஸ்பாட் பக்கமே அவர் வரவில்லையாம். தன் மீது தவறு இருப்பதை உணர்ந்து கொண்ட டி ராஜேந்தர் எப்படியோ அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்.

Also Read: எனக்கு நீ போட்டியா.? இந்த 5 நடிகர்களை காலி செய்ய ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. நேக்காக கழண்ட சத்யராஜ்!

இப்படி ரணகளத்துடன் படமாக்கப்பட்டு வெளியான தங்கைக்கோர் கீதம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சத்யராஜும், டி ஆரும் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். அதுமட்டுமல்லாமல் மற்றொரு சுவாரசியமான விஷயமும் அப்படத்தில் இருக்கிறது.

அதாவது இந்த படத்திற்கு முன்பு வரை சத்யராஜ் வெறும் 500, 1000 என்றுதான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாராம். முதல் முறையாக டி ஆர் தான் 4000 ரூபாய் சம்பளத்தை அவருக்கு கொடுத்திருக்கிறார். இதை அவரே ஒரு முறை மேடையில் கூறியிருக்கிறார். இப்படியாக அதிக சம்பளத்தை கொடுத்து கையோடு அடியையும் இலவச இணைப்பாக கொடுத்திருக்கிறார் அடுக்கு மொழி நாயகன்.

Also Read: பாசத்தால் உருக வைத்த டி ராஜேந்தர் 5 படங்கள்.. அண்ணன் தங்கை பாசத்தை காட்டிய ‘என் தங்கை கல்யாணி’

- Advertisement -

Trending News