பாசத்தால் உருக வைத்த டி ராஜேந்தர் 5 படங்கள்.. அண்ணன் தங்கை பாசத்தை காட்டிய ‘என் தங்கை கல்யாணி’

T Rajender Movies: தமிழ் சினிமாவில் ஆல்ரவுண்டராக கலக்கிக்  கொண்டிருந்தவர் தான் டி ராஜேந்தர். இவருடைய படங்கள் அனைத்தும் செண்டிமெண்ட்க்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். பெரும்பாலும் உணர்வு பூர்வமான கதைகளை தேர்வு செய்து இயக்கிய டிஆரின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த ஐந்து படங்களில் பாசத்தைக் காட்டி ஸ்கோர் செய்தார். அந்த படங்களை பற்றி பார்ப்போம்.

மைதிலி என்னை காதலி: டி ராஜேந்தர் எழுதி இயக்கி இசையமைத்த  திரைப்படம் தான் மைதிலி என்னை காதலி. இந்தப் படத்தில் மூலம் தான் டி ராஜேந்தர் உடன் ஸ்ரீ வித்யா, அமலா ஆகியோர் அறிமுகமானார்கள். இதில் மைதிலியாக அமலாவும், மாணிக்கமாக டி ராஜேந்தரும் நடித்தனர். இதில் மாணிக்கம் மைதிலியை காதலிப்பார், அவர் தனது சுயநலத்திற்காக மட்டும் அவரை பயன்படுத்துகிறார்.

மைதிலி என்ற பெயருடன் ஒரு எழுத்தாளர் கதை எழுதி, அதில் மாணிக்கத்தின் தியாகத்தையும் பார்த்து அவர் மீது காதல் ஏற்படுகிறது. இவ்வளவு உருக்கமான காதல் கதை களத்தைக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்ல காதலியிடம் ஏமாளியாக இருந்த மாணிக்கத்தை திரையில் பார்க்கும் போது பலரும் கண்ணீர் வடித்தனர். 

Also Read: கொள்கையோடு சினிமாவில் களமிறங்கிய 5 நடிகர்கள்.. நிஜ வாழ்க்கையிலும் கடைப்பிடித்த டி ஆர்

தங்கைக்கோர் கீதம்: டி ராஜேந்தர் எழுதி இயக்கி அவரது மனைவி  உஷா ராஜேந்தர் தயாரித்த திரைப்படமான தங்கைக்கோர் கீதம் என்ற படத்தில் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை காட்டினர். இதில் நளினி மற்றும் ராஜேந்தர் இருவரும் அண்ணன் தங்கையாக நடித்தனர். நளினியை  கஷ்டப்பட்டு வேலை செய்து தனி ஒரு ஆளாக ராஜேந்தர் கல்லூரி வரை படிக்க வைப்பார். ஆனால் ஆனந்த் பாபு காதலில் விழுந்த நளினி ஒரு கட்டத்தில் அவருடைய பிடியிலிருந்து மீண்டு அண்ணன் பார்த்து வைத்த சிவகுமாரை திருமணம் செய்து கொள்வார்.

ஆனால் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியாமல் போலி நகையை நளினிக்கு ராஜேந்தர் போட்டு விடுவார். ஒரு கட்டத்தில் அதைப் பற்றி ஆனந்த் பாபு தெரிந்து கொண்டு நளினியின் வாழ்க்கையில் மீண்டும் நுழைய பார்ப்பார் .இதையெல்லாம் டிஆர் எப்படி சமாளித்து தன்னுடைய தங்கையை சந்தோஷமாக வாழ வைக்கிறார் என்பதுதான் படத்தின் உருக்கமான கதை.

Also Read: 40 படங்களில் நடித்த மும்தாஜின் மொத்த சொத்து மதிப்பு.. கவர்ச்சிக்காகவே கல்லா கட்டிய நடிகை

உயிருள்ளவரை உஷா: இதில் டிஆர் உடன் நளினி, எஸ் எஸ் சந்திரன், கங்கா உள்ளிட்டோர் இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் இயக்குனராக தயாரிப்பாளராக இசையமைப்பாளராக நடிகராக பாடல் ஆசிரியராக ஒளிப்பதிவாளராக வசனகர்த்தாவாக இன்னும் சினிமாவில் என்னென்னவெல்லாம் இருக்கிறதோ அத்தனை பொறுப்பையும் ஒரே ஆளாக சுமந்தவர். தொடர்ந்து தன்னுடைய படங்களில் 9 எழுத்துக்களில் டைட்டிலை வைக்கும் ஃபார்முலாவை இந்தப் படத்திலும் பயன்படுத்தி இருப்பார்.

இதில் பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் நல்ல ரவுடியாக ஜெயில் ஜெயபால் என்கின்ற கேரக்டரில் டி ஆர் நடித்தார். இன்று வரை அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம்  பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. 40 ஆண்டுகளைக் கடந்தும் உயிருள்ள உஷா என்கின்ற காவியம் காதலர்களால் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட உருக்கமான காதல் கதையைக் கொண்ட படம் தான் இந்த படம். 

ஒருதாயின் சபதம்: டிஆர் எழுத்து இயக்கி இசையமைத்து தயாரித்த  இந்தப் படத்தில் ஒரு வழக்கறிஞராக  தன்னுடைய அடுக்குமொழி வசனத்தால் பின்னி பெடல் எடுத்திருந்தார். இதில் டிஆர் அப்பாவியாக இருந்து தன்னுடைய தந்தையின் மீது கொலைக் குற்றத்தை சுமத்தி மரண தண்டனை வாங்கிக் கொடுத்த மூத்த வழக்கறிஞருக்கு எதிராக போராடும் மகனாக நடித்திருந்தார். தன்னுடைய அழகான குடும்பத்தை  சிதைத்த பாவியை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக டிஆர் படும் பாடு இந்த படத்தை பார்ப்பதற்கு உருக்கமாக இருக்கும். 

Also Read: எவ்வளவு டென்ஷன் ஆனாலும் நடிகை மீது கை வைக்காத ஒரே இயக்குனர்.. சீக்ரெட்டை புட்டு புட்டு வைத்த சந்தானம்

என் தங்கை கல்யாணி: டிஆர் தன்னுடைய மகன் லிட்டில் சூப்பர் ஸ்டார்  சிம்புவுடன் சேர்ந்து நடித்த  படம் தான் என் தங்கை கல்யாணி.  இதில் டி ராஜேந்திரனுக்கு தங்கையான  கல்யாணியின் மகனாக சிம்பு நடித்திருந்தார். தன்னுடைய தங்கையையும் அம்மாவையும் அப்பா கைவிட்ட பிறகு டிஆர் தான் அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சகோதரி திடீரென்று மோசமான ஒருவரை காதலித்து சென்று விடுகிறார்.

அதன் பிறகு அவருடைய மகனுடன் மறுபடியும் தாய் வீட்டுக்கு வருகிறார். பிறகு  தன்னுடைய தங்கச்சியை எப்படி மாப்பிளையுடன் சேர்த்து வைத்து சந்தோசமாக வாழ வைக்கிறார்  என்பதுதான் படத்தின் கதை.  இதில் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை டிஆர் உருக்கமாக சொல்லி ரசிகர்களை சென்டிமெண்டாக லாக்  செய்தார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை