Connect with us

Entertainment | பொழுதுபோக்கு

எனக்கு நீ போட்டியா.? இந்த 5 நடிகர்களை காலி செய்ய ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. நேக்காக கழண்ட சத்யராஜ்!

தனக்கு போட்டிக்கு யாருமே இருக்க கூடாது என முடிவெடுத்து ரஜினி போட்ட மாஸ்டர் பிளான் என்னன்னு பார்க்கலாம்.

rajini-sathiyaraj

Rajinikanth: தனக்கு நிகராக வசூல் செய்தாலோ, நடிப்பில் பிரமிக்க வைத்தாலோ அவர்களை நிமிர விடாமல் ஒரு கை பார்ப்பதில் நடிகர்களுக்கு அவ்வளவு பேரானந்தம். அந்த வகையில் ரஜினி தனக்கு போட்டியாக இருந்த நடிகர்களை வில்லனாக மாற்றினால் கேரியரை க்ளோஸ் செய்து விடலாம் என எண்ணி 5 நடிகர்களுக்கு தேடி போய் வாய்ப்பு கொடுத்தார்.

ராமராஜன்: “கரகாட்டக்காரன்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் தனது நடிப்பினால் ஈர்த்தவர் தான் ராமராஜன். இவர் ஆரம்பத்தில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார். பிறகு “நம்ம ஊரு நல்ல ஊரு” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறியப்பட்டார். இவரது எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து செண்பகமே செண்பகமே, எங்க ஊரு காவல்காரன், பாட்டுக்கு நான் அடிமை போன்ற திரைப்படங்கள் வெற்றியால் அப்பிருந்த முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் போன்றவருக்கு இணையாக இவருக்கும் ரசிகர்கள் இருந்தனர்.

Also Read: விஜய்யை கழட்டிவிட்டு கமலுக்கு கொக்கிப்போடும் அட்லீ.. ஜவான் ரிலீசுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட அலப்பறை

ராஜ்கிரன்: இந்த வரிசையில் நடிகர் ராஜ்கிரனும் ஒருவர். இவர் அப்போது பெரும்பாலும் துணை நடிகராக நடித்துக் கொண்டிருந்தார். பிறகு நடிகராகவும் சில படங்கள் நடித்துள்ளார். அதிலும் அனைவராலும் பேசப்படுகிற படங்கள் குறிப்பாக “ராசாவின் மனசிலே”, “தவமாய் தவமிருந்து” போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை தேடி தந்தது. இவரது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்கள் அதிகமாக இவருக்கு இருந்தார்கள்.

விஜயகாந்த்: கேப்டன் என அனைவராலும் அழைக்கப்படும் விஜயகாந்த் இதில் ஒருத்தர். ஆரம்ப காலத்தில் இவர் நடித்து வெளியான சில படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. இருப்பினும் இவரது தொடர் முயற்சியால் இவருக்கு என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாக கரணம் ஆனது. இவரது நடிப்பில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை,கேப்டன் பிரபாகரன், வானத்தைப்போல, தாயகம், சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிதும் வெற்றியைத் தேடித் தந்தது. இவருக்கென தனி ரசிகர் படையே  இருந்தார்கள். தனக்கு போட்டியாக இருப்பவர்களுக்கு ஒரு சவாலாக இருந்தார்.

Also Read: நாம் தான் மேதாவி என தலைவிரித்து ஆடும் 5 இயக்குனர்கள்.. ரஜினியால் ஆட்டிட்யூட் சரியில்லை என நிராகரிக்கப்பட்ட இயக்குனர்

சத்யராஜ்: “கட்டப்பா” என இளைய தலைமுறையினர்களால் நன்கு அறியப்படும் சத்யராஜும் இதில் ஒருவர். இவர் அப்பொழுது இருந்த நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டிருந்தார். குறிப்பாக வால்டர் வெற்றிவேல், நடிகன், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, சின்னத்தம்பி பெரியதம்பி, போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை தேடித்தந்தது. அதை தொடர்ந்து தற்போது நண்பன், பாகுபலி தி பிகினி, பாகுபலி 2 போன்ற திரைப்படங்களிலும் விருதுகளை அள்ளி குவித்தவர். அப்பொழுது இவரையும் காலி செய்யும் நோக்கில் ரஜினிகாந்த் தனது பாடத்தில் வில்லனாக இவரை நடிக்க வைக்க வேண்டும் என எண்ணினார். அதற்கு தகுந்தவாறு இவரும் “மிஸ்டர் பாரத்” என்னும் படத்தின் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். அதன் பின்பு வாய்ப்பு ஏதேனும் வந்தாலும் கூட அவர் அதனை மறுத்துவிட்டார். அப்பொழுது இருந்து உஷாராக அதில் சிக்காமல் கழண்டு கொண்டார்.

கமல்ஹாசன்: உலகநாயகன் கமல்ஹாசும் இந்த லிஸ்டில் ஒருவர்தான். குறிப்பாக சொல்லப்போனால் அனைவரையும் காட்டிலும் ரஜினிகாந்த்துக்கு இணையாக ரசிகர்களை கொண்டிருந்தவர் தான் இவர். சொல்லப்போனால் கமல்ஹாசனின் ரசிகர்களுக்கும் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் தான் பெரிய போட்டியே இருக்கும் யார் பெரியவர் என்று. கமல்ஹாசன் தனது சிறு வயதிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார். “களத்தூர் கண்ணம்மா” என்னும் திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார். சிகப்பு ரோஜாக்கள், மைக்கேல் மதன காமராஜர், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்ற ஏராளமான திரைப்படங்கள் இவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது. அது மட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே அப்போது இருந்து தற்போது வரை உள்ளனர்.

Also Read: ரஜினியின் சிஷ்யன் என்பதற்காக கமலை அசிங்கப்படுத்திய லாரன்ஸ்.. மொத்த சங்கதியும் வெளியான அம்பலம்

Continue Reading
To Top