11 வருட பாய்ச்சலில் சிங்கம்.. சூர்யாவுக்கு இனி இப்படி ஒரு மாஸ் படம் கிடைக்குமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. ஆனால் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார். இருந்தாலும் தனது தொடர் முயற்சியால் தற்போது சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக இடம்பிடித்துள்ளார்.

ஒரு காலத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வெற்றி பெறாமல் சுமாரான வெற்றியை மட்டுமே பதிவு செய்து வந்தன. அதன்பிறகு இவர் சரியான கதையம்சம் உள்ள கஜினி, நந்தா மற்றும் பிதாமகன் படங்களை தேர்வு செய்து நடித்து தனக்கென தமிழ் சினிமாவில் ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.

அதன்பிறகு சூர்யா நடிப்பில் 25 வது படமாக உருவான சிங்கம் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், படத்தின் வசனத்தையும் ஹரி செதுக்கி வைத்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு” எனும் வசனம் இதெல்லாம் படம் வெளிவந்த காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

Singam-3-Movie-New-Stills-02
Singam-3

அனுஷ்காவின் நடிப்பும் சூர்யா மேல் காதல் கொள்ளும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் ரசிக்க கூடிய அளவிற்கு சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக காமெடியில் விவேக் கலக்கியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் மாபெரும் வெற்றி பெற்றன. அதுவும் சன் பிக்சர்ஸ் படத்தின் புரமோஷனுக்கு பக்கபலமாக இருந்தது. இப்படி படத்தின் வெற்றிக்கு ஒவ்வொருவரும் தனது உழைப்பை போட்டிருந்தனர்.

இந்த படத்தின் முதல் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய பாகங்கள் வெளியாயின. ஆனால் கடைசியாக வெளியான சிங்கம் 3 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் சற்று சரிவை சந்தித்தது. மேலும் இந்தியாவில் உள்ள பல மொழிகளிலும் சிங்கம் படம் ரீமேக் ஆனது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் தெலுங்கு நடிகர்களுக்கு இணையாக சூர்யாவின் மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்ததும் சிங்கம் திரைப்படம் தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்