ரோலக்ஸ் சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. திக்குமுக்காடிய திரையுலகம்

சூர்யா சமீபகாலமாக ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றன. தற்போது விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். இந்நிலையில் உலக சினிமாவே மிகப் பெரிதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய் பீம் படங்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவிற்கு உறுப்பினராக சூர்யா தேர்வாகியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது இந்த விருது விழாவில் பங்கெடுக்கும் படங்களுக்கு ஆஸ்கர் கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

அதில் படம், நடிகர், நடிகை, மற்ற பிரபலங்கள் ஆகியவற்றில் அதிக வாக்குகள் யார் பெறுகிறார்களோ அவர்களுக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் இந்த உறுப்பினர்களின் பெயர் பட்டியல் மாற்றப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 397 பேர் அடங்கிய ஆஸ்கார் உறுப்பினர்கள் பெயர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

அதில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை காஜல் பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக ஏ ஆர் ரகுமான், அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அமிதாபச்சன், வித்யாபாலன், ப்ரியங்கா சோப்ரா போன்றவர்கள் ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர்.

முதல் முறையாக சூர்யாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த செய்தியை அறிந்த சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்