சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எம்ஜிஆர் பாணியை ஃபாலோ பண்ணும் சூர்யா, கார்த்தி.. வியக்க வைத்த சிவகுமாரின் குடும்பம்

சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் ஆகவும் அமைந்தது.

அப்போது சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் மேடையில் கலகலப்பாக பேசியது பலரையும் கவர்ந்தது. எத்தனையோ விஷயங்கள் குறித்து அவர்கள் இருவரும் பேசி இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் பலரும் வியந்து பார்க்கும் வண்ணம் இருந்தது.

அதாவது அவர்கள் இருவரும் எம் ஜி ஆர் செய்து வந்த ஒரு விஷயத்தை இப்போது வரை பின்பற்றி வருவதாக குறிப்பிட்டார்கள். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு மரியாதையும், முக்கியத்துவமும் கொடுப்பாராம்.

அவர்களின் பாதுகாப்பிலும் அக்கறை காட்டுவாராம். இதைப்பற்றி கூறிய சூர்யா, கார்த்தி இருவரும் இந்த விஷயத்தை எங்க அப்பா தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். மேலும் சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களை நடிகர்களாகிய நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

நம்மளை நம்பி வருபவர்களுக்கு நாம் தான் அனைத்து விதமான பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். அவர்களின் இந்த தெளிவான, முதிர்ச்சியான பேச்சு பலரின் கைத்தட்டலையும் பெற்றது. சினிமாவை பொருத்தவரையில் சிவகுமாரின் குடும்பம் பாரம்பரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பெரிய நடிகர்களாகி விட்ட பிறகும் கூட சூர்யாவும், கார்த்தியும் அப்படியே பின்பற்றி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அப்பாவின் பேச்சை தட்டாத பிள்ளைகளாகவும் இவர்கள் இருக்கிறார்கள். இதுவே அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தின் மீது ஒரு மரியாதையை வரவழைக்கிறது. அந்த வகையில் சிவகுமாரின் குடும்பம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

- Advertisement -

Trending News