நடிகர் சுருளிராஜன் இறந்தது எப்படி தெரியுமா? இப்படி ஓர் சாவு யாருக்கும் வரக்கூடாது

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் கொடி கட்டி பறந்தவர் சுருளிராஜன். அப்போதெல்லாம் சினிமாவில் இவருடைய காலம் என்றுதான் பலரும் கூறுவார்கள். அதற்குக் காரணம் அப்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் இவரது காமெடி ரசிகர்கள் பெரிதாக வரவேற்றனர். அதனால் அப்போது இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை எப்படியாவது படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என தொடர்ந்து போராடி கால்சீட் வாங்குவார்களாம் அந்தளவிற்கு பிரபலமாக இருந்துள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் ரொம்ப நெருக்கமாக பழக கூடிய ஒரு நல்ல மனிதர். கவிதா ஹோட்டலில் எப்பொழுதும் அவருக்கு என ஒரு ரூம் இருக்குமாம் பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அனைவரையும் மதுவினால் குளிப்பாட்டி அனுப்பி விடுவாராம். அந்த அளவிற்கு பத்திரிக்கையாளர்களிடம் நெருக்கமாக பழகி உள்ளார்.

ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சம்பளம் வாங்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒரே நேரத்தில் 7 படங்களில் நடித்துள்ளார். ஓர் இயக்குனருக்கு 3 மணி நேரம் மட்டும்தான் கால்ஷீட் கொடுப்பாராம். அந்த அளவுக்கு பிஸியாக நடித்துள்ளார்.

அப்போதெல்லாம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு எதாவது உதவி கேட்டால் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் சம்பளத்தை குறைத்துக் கொள்வாராம். அந்த அளவிற்கு அனைவருக்கும் உதவியுள்ளார்.

suruli rajan
suruli rajan

யாரோ ஒருவர் கூறியதை கேட்டு இளநீரில் ஜின் மதுவை ஊற்றி குடித்துள்ளார். அதனால் கல்லீரல் பாதிப்படைந்துள்ளது. மேலும் உடம்பில் சுகரும் ஏறிவிட்டது. அதனால் மிகவும் பாதிதுள்ளார். எம்ஜிஆர் எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என விமானத்தின் மூலம் கூட மருந்துகள் வருவதற்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

Next Story

- Advertisement -