சூர்யா(40)வுக்கு வில்லனாகும் மிஷ்கின் பட கொடூர வில்லன்.. ஒரு காலத்துல சாக்லேட் பாயாக இருந்தவரு!

சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சூர்யா இல்லாமல் நடைபெற்று வருகிறது.

முதலில் சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளார்களாம். சூர்யாவுக்கு சமீபத்தில் கொரானா தொற்று ஏற்பட்டது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

அதன்காரணமாக தற்போது கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு விரைவில் சூர்யா 40 படத்தில் இணைய உள்ளார். மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் என்ற இளம் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்டர் படத்தில் நாயகியாக நடித்தவர்.

suriya40-cinemapettai-01
suriya40-cinemapettai-01

இரண்டாவது படமே அவருக்கு முன்னணி ஹீரோவுடன் என்பதால் கீர்த்தி சுரேஷ் ரேஞ்சுக்கு பிரியங்கா மோகனும் தமிழ் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சூர்யா 40 படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார்.

சூர்யாவும் இமானும் இணைவது இதுதான் முதல்முறை என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் சூர்யா 40 படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்த வினய் நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே டாக்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமில்லாமல் ஒரு காலத்தில் இளம்பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர். ஹீரோவாக சோபிக்க முடியாததால் தற்போது வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வினய் இதில் வெற்றி பெறுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்