Tamil Cinema News | சினிமா செய்திகள்
புயல் வேகத்தில் போகும் சூர்யா 40.. குறுக்க மணல் லாரி வராம இருந்தா சரிதான்!
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யா முன்னரை விட தற்போது மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுகிறாராம். அதற்கு காரணம் நீண்ட நாள் காத்திருந்ததற்கு பலனாக சூரரைப்போற்று படம் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.
இனி மீண்டும் தோல்விப் பாதைக்கு செல்ல கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம் சூர்யா. அதன் காரணமாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான இயக்குனர்களை தெளிவாக தேர்வு செய்து வருகிறார்.
அந்தவகையில் அடுத்ததாக தம்பி கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம் என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்த பக்கா கமர்சியல் இயக்குனர் பாண்டிராஜூடன் இணைந்து தற்போது சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிப்ரவரி இறுதியில் தொடங்கப்பட்ட சூர்யா 40 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். முதலில் சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

suriya40-cinemapettai
சமீபத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்ட சூர்யா, அதிலிருந்து மீண்டு விரைவில் சூர்யா 40 படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் சூர்யா 40 படத்தை ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்னதாகவே மொத்த படத்தையும் முடிக்க உள்ளார்களாம்.
இதனால் சூர்யா 40 பட வேலை அரக்கப் பரக்க நடந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை முடித்துக் கொடுத்த அடுத்த மாதமே சூர்யா சிறுத்தை சிவாவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் கூடுதல் தகவல். இதில் எந்த ஒரு தடங்கலும் இல்லாமலிருந்தால் சூர்யா நினைத்தபடி இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு படங்கள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
