விஜய், அஜித்துடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட ரசிகர்கள் சூர்யா பக்கம் செல்லாதது ஏன்? எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்!

vijay-ajith-suriya
vijay-ajith-suriya

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட வந்த விஜய் மற்றும் அஜித் ஆகியோருடன் புகைப்படங்கள் எடுக்க ரசிகர்கள் முண்டியடித்து கொண்டதும், அதற்கு விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் நடவடிக்கைகளும் எப்படி இருந்தது என்பதும்தான் அன்றைய இணையதள ட்ரென்டிங்.

விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்கள். இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். இவர்களது பட வெளியீடு என்றால் தமிழ்நாட்டுக்கே பண்டிகை தான்.

அப்படிப்பட்ட நட்சத்திரங்கள் மக்களோடு மக்களாக ஓட்டு போட வந்தால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா. முண்டியடித்துக்கொண்டு புகைப்படங்கள் எடுக்க தானே ஆசைப் படுவார்கள். அது சில சமயம் எல்லை மீற அந்த நடிகர்களுக்கும் கோபத்தை வரவழைத்தது.

இது ஒருபுறமிருக்க அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்குப் பிறகு அதிக ரசிகர்கள் வைத்துள்ள தமிழ் நடிகர் என்றால் சூர்யா தான். ஆனால் சூர்யா ஓட்டு போடும் போது அவரை சுற்றி பெரிய அளவு ரசிகர் கூட்டம் இல்லை.

அதற்கு காரணம் யார் தெரியுமா. வேறு யாருமில்லை, செல்பி எடுத்ததற்காக ரசிகரின் செல்போனை உடைத்த சிவகுமார் தான். சூர்யா மற்றும் கார்த்தி இருவருக்கும் முன்னதாக சிவகுமார் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த ரசிகர்கள் சூர்யாவுடன் செல்பி எடுக்கும் ஆசையை மறந்து விட்டார்களாம்.

இதை இணையத்தில் மீம்ஸ் போட்டு ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டி வருகின்றனர். மேலும் தேர்தலை ஒட்டி வந்த நிறைய மீம்ஸ்களில் இந்த மீம்ஸ் நிஜமாவே ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.

suriya-sivakumar-meme
suriya-sivakumar-meme
Advertisement Amazon Prime Banner