ஆஸ்திரேலியாவில் விருதுகளை தட்டி தூக்கிய சூர்யா மற்றும் சமந்தா.. இந்திய அளவில் குவியும் பாராட்டு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சூர்யாவை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதிலும் சூர்யா நடித்த காட்சிகள் அனைவரும் பாராட்டினர். அந்த அளவிற்கு சூர்யா தனது நடிப்பின் மூலம் பாராட்டை பெற்றார். இப்படம் ஆஸ்கர் விருது விழாவிற்கு கலந்து கொள்ளும் எனவும் கூறி வந்தனர். ஆனால் அதில் இடம்பெறவில்லை.

தற்போது இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்போர்ன் எனும் விருது விழாவில் சூர்யா உட்பட இந்தியாவில் பல நடிகர்கள் சிறந்த நடிகருக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால் இதில் சூர்யாவிற்கு சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரசிகர்கள் பலரும் சூர்யாவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

suriya
suriya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சமந்தாவை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அந்த அளவிற்கு தைரியமாக நடத்தியதாக பலரும் கூறி வந்தனர். தற்போது இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்போர்ன் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது பலரும் சமந்தாவிற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

samantha
samantha

சூர்யா மற்றும் சமந்தா இருவரும் பெல்போர்னியா விருது வாங்கியுள்ளனர். தற்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். திரை பிரபலங்களும் பலரும் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்