Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடடா… விருதுகளை அள்ளுகிறது சூரரைப்போற்று… கெத்து காட்டுகிறார் சூர்யா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா சிவகுமார். இவர் தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தில் சூர்யா முதன்முறையாக வழக்கறிஞராக நடித்து வருகிறார். இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப் போற்று திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை சிறந்த படத்திற்காக Oxygen Play Awards, Blacksheep Digital Awards, Hit List OTT Awards ஆகிய விருதுகளை வென்றுள்ளது. இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் சூர்யா சிறந்த நடிகருக்கான Cinema At Its Best Awards விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யா சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம், சிறந்த படமாக சூரரைப்போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

suriya

suriya

மேலும், இந்த விழாவில் சிறந்த நடிகையாக தி பேமிலி மேன் வெப்தொடருக்காக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் உற்சாகமடைந்துள்ள சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதைக் கொண்டாடி வருகின்றனர்.

samantha

samantha

ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாகியிருந்தது நினைவிற்குரியது. முன்னதாக கஜினி, நந்தா, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருதை சூர்யா பெற்றது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top