Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலா சொன்ன கதை.. செமையா இருக்குனு சொல்லிட்டு அஜித் இயக்குனருக்கு வாய்ப்பளித்த சூர்யா

suriya

சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. எப்படியும் படத்தின் வெற்றிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமே முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும். அதனால் சூர்யா இப்படத்தினை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் அடுத்த படத்தின் மீதான கவனத்தை செலுத்தி உள்ளார்.

பல நாட்களாக பாலா சூர்யாவிடம் ஒரு கதையை கூறியிருந்தார். இக்கதை சூர்யாவிற்கும் பிடித்துப்போக கண்டிப்பாக இருவரும் இணைந்து இப்படத்தில் பணியாற்றலாம் என கூறியுள்ளார்.

அதனால் பாலாவும் பல மாதங்களாக சூர்யாவிற்காக படத்தின் கதையை வைத்துள்ளார். இந்த சமயத்தில் சிவாவும் சூர்யாவிடம் படத்தின் கதையை ஒரு லைனில்  கூறியுள்ளார். இதுவும் சூர்யாவுக்கு பிடித்துப்போக இயக்குனர் சிவா படத்தில் நடிப்பதற்கான சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

bala-cinemapettai

Director Bala

இதனால் சூர்யாவிற்கு ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதில் யாருக்கு முதலில் வாய்ப்பு கொடுப்பார் என்பதில் தான் சிக்கல் எழுந்துள்ளது. ஆரம்பத்தில் சூர்யாவின் வளர்ச்சிக்கு உதவிய பாலாவிற்குதான் பெரிய அளவில் வாய்ப்பு கொடுப்பார் என கூறி வருகின்றனர்.

ஆனால் சமீபகாலமாக சிவா இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் கண்டிப்பாக சிவாவிற்கு தான் சூர்யா வாய்ப்பு கொடுப்பார் என கூறி வருகின்றனர். இதனால் சூர்யா யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பதில் குழப்பத்தில் இருக்கிறார். ஆனால் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு பாலாவுடன் தான் இணைவார் என பலரும் கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top