என்னது 30 கோடியா.! எகிறிய பட்ஜெட்டால் நடிகரை மாற்றிய சூர்யா அண்ட் கோ.

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு OTTயில் ரிலீசான படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக எடுக்கப்பட்ட படம் தான் இது.

விமானப் பயணத்தை சாமானிய மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு கொடுக்க போராடும் இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகள், அரசியல் சதிகள் ஆகியவற்றை தாண்டி எப்படி சாதிக்கிறார் என்பதை காட்டுவதாக இந்த படம் அமைக்கப்பட்டுள்ளது.

சூர்யா, அபர்னா பாலமுரளி, கர்ணாஸ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த படத்தையும், சுதாவே இயக்க போவதாகவும், சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட்  படத்தை தயாரிக்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் டாப் ஹீரோவான அக்ஷய் குமார் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் 30 கோடி சம்பளம் கேட்கவே படக்குழுவினருக்கு தலைசுற்றியது. அதன்பின் தற்போது ஷாகிப் கபூரை ஹீரோவாக நடிக்க வைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Akshay-Cinemapettai.jpg
Akshay-Cinemapettai.jpg

ஷாகித் கபூர் தற்போது கபீர் சிங் ரீமேக்கில் நடித்து வருகிறார். அதோடு அவர் நடித்த மற்றொரு ரீமேக்கான ஜெர்சி படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

Sahid-Cinemapettai.jpg
Sahid-Cinemapettai.jpg
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்