Tamil Cinema News | சினிமா செய்திகள்
கைவிட்ட சன் டிவி, கைகொடுத்த விஜய் டிவி.. 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் பிரபல நடிகர்

இன்று விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற பல சேனல்கள் நல்ல நல்ல சீரியல்களை ஒளிபரப்பி தாய்மார்களை கவர்ந்து வைத்திருக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக சீரியல் உலகின் ஜாம்பவானாக இருப்பது சன் டிவிதான்.
சன்டிவி பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளது. தற்போது வரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. சன் டிவியில் இருந்து பல பேர் மற்ற சேனல்களுக்கு சென்று பெரியாளாகி உள்ளனர்.
ஆனால் விதை போட்டது என்னமோ சன் டிவிதான். அந்த வகையில் சன் டிவியில் 13 வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட தென்றல் என்ற சீரியலில் நாயகனாக நடித்தவர் தீபக்.

sun-tv-cinemapettai
அதன்பிறகு இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு சில காலம் மீடியாவை விட்டு விலகி இருந்தவர் மீண்டும் ஜீ தமிழ் மூலம் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்தார்.
இருந்தாலும் அவருக்கு பழைய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் விஜய் டிவி அவருக்குப் பெரிதும் உதவியுள்ளது. விரைவில் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

deepak-actor
இதில் 11 வருடங்களுக்குப் பிறகு நாயகனாக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் தீபக். விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்து விட்டாலே அவர்களது லைப் செட்டில் தான் என்பதை நம்பி களம் இறங்கியுள்ளாராம் தீபக்.
