Connect with us
Cinemapettai

Cinemapettai

jayam-ravi-sun-tv

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெயம் ரவிக்காக நடையாய் நடக்கும் மாமியார்.. திரும்பி கூட பார்க்காத சன் டிவி

ஜெயம் ரவிக்காக நடையாய் நடந்தும் மாமியாரை கண்டுகொள்ளாமல் போன சன் டிவி.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள அகிலன் திரைப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் சக்கை போடு போட்ட நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் சைரன் திரைப்படத்திற்கு ஒரு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். தற்போது முடிவுரும் தருவாயில் இருக்கும் இப்படத்தை வாங்குவதற்கு எந்த சேனல்களும் தயாராக இல்லையாம்.

Also read:கடல் வழி மாஃபியாவின் நிஜ முகம் தான் அகிலன்.. எப்படி இருக்கு? முழு விமர்சனம்

அதாவது ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனாலேயே தற்போது முன்னணி தொலைக்காட்சிகள் கூட இவர் பாடத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறதாம். அந்த வகையில் ஜெயம் ரவியின் மாமியார் சன் டிவியிடம் இப்படத்தை விலை பேசுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் ஏற்கனவே சீரியல் சம்பந்தமாக இவர்களுக்குள் சிறு மனகசப்பு இருக்கிறது. சுஜாதா விஜயகுமார் சன் டிவிக்காக ஏகப்பட்ட சீரியல்களை தயாரித்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக இப்போது சன் டிவி இப்படத்தை வாங்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். இதனால் நொந்து போன அவர் விஜய் டிவி பக்கம் நடையை கட்டி இருக்கிறார்.

Also read: ஹார்பர் க்ரைமை வெளிச்சம் போட்டு காட்டும் அகிலன்.. ஜெயம் ரவிக்கு வெற்றியா, தோல்வியா.? ட்விட்டர் விமர்சனம்

அவர்களும் பதறிப்போய் ஏற்கனவே பூமி திரைப்படத்தை வாங்கி நாங்கள் பட்ட நஷ்டமே போதும், உங்கள் படம் எங்களுக்கு வேண்டாம் என்று கூறியிருக்கின்றனர். இப்படி முன்னணி தொலைக்காட்சிகள் படத்தை வாங்க மறுத்ததால் யாரிடம் தள்ளிவிடலாம் என்று ஜெயம் ரவியின் மாமியார் தீவிர சிந்தனையில் இருக்கிறாராம்.

எதற்கும் முயற்சி செய்யலாம் என்று மற்ற சேனல்களிடமும் படத்தை தூக்கிக்கொண்டு நடையாய் நடக்கிறாராம். ஆனால் அதற்கான பலன் தான் தற்போது பூஜ்ஜியமாக இருக்கிறது. இதுதான் இப்படி என்றால் ஓடிடியில் கூட படத்தை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. இது ஜெயம் ரவிக்கு தான் பெரும் அவமானமாக இருக்கிறதாம். இருப்பினும் படத்தை நல்ல விலைக்கு டீல் பேச சில மறைமுக வேலைகளும் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: எச்சக்கலை, பொறுக்கி, பொறம்போக்கு இவன் யாருடா.. மொத்த ஹர்பரே தரைமட்டமாக்கிய அகிலன் டிரைலர்

Continue Reading
To Top