Videos | வீடியோக்கள்
எச்சக்கலை, பொறுக்கி, பொறம்போக்கு இவன் யாருடா.. மொத்த ஹர்பரே தரைமட்டமாக்கிய அகிலன் டிரைலர்
ஜெயம் ரவியின் அகிலன் பட ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நிறைய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் அகிலன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
மேலும் சமீபகாலமாக ஜெயம் ரவியின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் பொன்னியின் செல்வன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஆனால் அதில் பல நட்சத்திரங்கள் நடித்த நிலையில் சோலோவாக ஒரு ஹிட் படம் கொடுக்க முடியாமல் ஜெயம் ரவி திணறி வருகிறார்.
Also Read : ஜெயம் ரவிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இந்த வருடம் மட்டும் இத்தனை படங்களா?
அகிலன் படம் அவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று உறுதியாக உள்ளார். ஏனென்றால் இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அதில் கடற்படை அதிகாரியாக மாஸ் காட்டி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அகிலன் படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. மேலும் பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கப்பல் வழியாக எப்படி கடத்தப்படுகிறது என்பதை பயமாக வைத்து அகிலன் படம் எடுத்துள்ளார்கள்.
Also Read : அருள்மொழி வர்மனுக்கு அடுத்தடுத்து வெளிவர உள்ள 5 படங்கள்.. சோலோ ஹிட் கொடுக்க படாத பாடுபடும் ஜெயம் ரவி
இதில் லோக்கலான வசனங்களை வாரி இறைத்துள்ளார் ஜெயம் ரவி. மேலும் சில காட்சிகளில் தனி ஒருவன் படத்தையும் அகிலன் டிரைலர் ஞாபகப்படுத்துகிறது. மார்ச் 10ஆம் தேதி ஜெயம் ரவியின் அகிலன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Also Read : பொன்னியின் செல்வன் ஹிட் ஆகியும் பிரயோஜனம் இல்ல.. ஒரே படத்தால் டல்லான ஜெயம் ரவியின் 3 படத்தின் பிஸினஸ்
