நான் சொல்லியதை கேட்க மறுத்த சேவாக்.. 18 வருடங்கள் கழித்து மனம்திறந்த கங்குலி

எந்த பவுலர் வந்தாலும் நான் என்னுடைய ஸ்டைலை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்று கடைசிவரை விடாப்பிடியாக நின்று கிரிக்கெட்டில் சாதித்தவர் விரேந்திர சேவாக். 43 வயது நிரம்பிய சேவாக் இந்திய அணிக்காக 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

இந்திய அணிக்காக 251 ஒருநாள் போட்டிகள், 104 டெஸ்ட் போட்டிகள், 19 T- 20 போட்டிகள் விளையாடியுள்ளார். அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன விரேந்திர சேவாக்கை கண்டு அஞ்சாத பவுலர்களை இல்லை. இவர் காலத்தில் விளையாடிய வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், பிரட் லீ, சோயப் அக்தர், சேன் வார்னே போன்ற பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

ஆரம்ப காலகட்டத்தில் 5வது மற்றும் 6வது இடத்தில் இறங்கிய சேவாக் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் கேப்டன் கங்குலியுடன் ஓபனிங் இறங்க ஆரம்பித்தார். அதன்பின்னும் அடங்காத இவர் 70 பந்துகளில் சதம், 30 பந்துகளில் அரை சதம் என தொடர்ந்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டே இருந்தார்.

Shewag-Cinemapettai.jpg
Shewag-Cinemapettai.jpg

இந்நிலையில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற நேட்வெஸ்ட் தொடர் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக 325 ரன்களை குவித்தது. அந்த போட்டியில் கங்குலியுடன், விரேந்திர சேவாக் ஓபனிங் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 12 ஓவர்களுக்கு 82 ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது. அப்பொழுது சௌரவ் கங்குலி, விரேந்திர சேவாக்யிடம் ரன் ரேட் நன்றாக இருக்கிறது கொஞ்சம் நிதானமாக ஆடுவோம் என்று கூறியுள்ளார்.

கங்குலி சொன்ன அந்த வார்த்தைகளை சேவாக், செவிகொடுத்து கூட கேட்கவில்லையாம். 13வது ஓவரை வீசிய ரோனி இராணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதரடித்துள்ளார். அந்த ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகளை விளாசித் தள்ளியுள்ளார் சேவாக். இவரின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இந்த ரகசியத்தை 18 ஆண்டுகள் கழித்து இப்பொழுது பிசிசிஐ தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலி வெளியிட்டுள்ளார்.

Natwest-Cinemapettai.jpg
Natwest-Cinemapettai.jpg
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்