புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அநியாயமாக உயிரிழந்த ராணுவ வீரன் பிரபு.. உண்மையை வெளிக்கொண்டு வந்த தேசிய ஊடகங்கள்

கிருஷ்ணகிரியை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் பிரபு அரசியல்வாதியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த மீடியாவும் இது பற்றி வாய் திறக்க மறுத்த நிலையில், தேசிய ஊடகங்கள் இந்த விஷயத்தை பிரேக்கிங் நியூஸ் ஆக போட்டு வெட்ட வெளிச்சம் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 33 வயது பிரபாகரன், 29 வயது பிரபு ஆகிய இரண்டு சகோதரர்களும் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால், உறவினரின் திருமணத்திற்காக கடந்த 8-ம் தேதி விடுமுறைக்கு வந்திருக்கின்றனர். அப்போது மனைவி பிரியாவுடன் பொது குடிநீர் தொட்டிக்கு அருகில் பிரபு துணி துவைத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த சின்னசாமி, இது குடிநீர் இதில் ஏன் துணி துவைக்கிறீர்கள்? என்று கேட்டதாக கூறப்படுகிறது.

Also Read: பல்லாயிரம் பேர் வேலை இழக்க இதுதான் முக்கிய காரணம்.. அதிர்ச்சியை கிளப்பிய உண்மை நிலவரம்

அதற்கு பதில் அளித்த பிரபாகரன் மற்றும் சின்னசாமிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. பிறகு பொதுமக்கள் அவர்களை விலக்கிய நிலையில், அன்று மாலை சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் குரு சூரியமூர்த்தி, குணநிதி, ராஜபாண்டியன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் பிரபாகரன் மற்றும் பிரபு, பிரியா ஆகியோரை சரமாரியாக உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் கடுமையாக தாங்கியுள்ளது.

அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபு மேல் சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்திருக்கிறார். அதைப்போல் பிரபாகரனும் கடும் காயத்துடன் சிகிச்சையில் இருக்கிறார்.

Also Read: சுந்தர் பிச்சையின் சம்பளத்திற்கு ஆப்பு வைத்த கூகுள்.. இந்தியளவில் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்

ஒரு ராணுவ வீரன் தமிழகத்தில் அரசியல்வாதியால் கொல்லப்பட்டது கொடுமையானது. இதற்கு காரணமான அந்த நபரை கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், ராணுவ வீரர் பிரபு நமக்கெல்லாம் எல்லை காவலர், அவரை அடித்தே கொன்று இருப்பது பலரையும் வேதனைப்படுத்தி உள்ளது.

தீவிரவாதிகளிடமிருந்து எல்லையை காப்பாற்ற போராடும் ராணுவ வீரரை உள்ளூர் அரசியல்வாதி அடித்துக் கொன்றது தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது வெட்கப்பட வேண்டிய செயல். தேசத்துக்கு தன்னுடைய உயிர், உடமை அத்தனையும் அர்ப்பணிக்கும் ஒரு ராணுவ வீரர், விடுமுறை நாட்களில் வரும் போது அவருக்கே பாதுகாப்பு இல்லாத சமுதாயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Also Read: அம்பானி பையனுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.. வைரலாகும் பிரம்மாண்ட நிச்சயதார்த்த புகைப்படங்கள்

10 ரவுடிகள் சேர்ந்து ஒரு ராணுவ வீரனை அடித்துக் கொன்றது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. அதிலும் இந்த சம்பவத்தை மீடியாவில் பேச விடாமல் செய்திருப்பது குற்றவாளிகளுக்கு துணை போகும் அரசியல் கட்சிகளை தேசிய ஊடகங்களில் கிழித்து தொங்க விடுகின்றனர். 2 ராணுவ வீரர்களை அர்ப்பணித்த பிரபுவின் குடும்பத்திற்கு இப்படி ஒரு கைமாறு செய்திருப்பதை நினைத்து வெட்கி தலை குனிய வேண்டும்.

இவ்வளவு துணிச்சலுடன் ஒரு ராணுவ வீரரை அடித்து கொலை செய்தவர்களை எந்த வித தலையிடும் இல்லாமல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் முதல்வருக்கு பலரது தரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்படுகிறது. மேலும் ராணுவ வீரர் பிரபுவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு #JusticeForPrabhu என்ற ஹாஸ்டேக்கை சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர். முதலமைச்சரும் இதற்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News