அச்சு அசல் அம்மாவை உரித்து வைத்திருக்கும் சினேகா மகள்.. வைரலாகும் க்யூட் போட்டோ

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ராணியாக வலம் வந்த சினேகா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டில் ஆனார். தற்போது அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு சினேகா நடிக்க மாட்டார் என பல்வேறு பேச்சுகள் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து விட்டு மீண்டும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சினேகா கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் சில தெலுங்கு படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்துள்ள சினேகாவுக்கு மீண்டும் வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன.

பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம். இந்நிலையில் சினேகா மீண்டும் தன்னுடைய மார்க்கெட் சூடுபிடிப்பதை அறிந்து தன்னுடைய சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி விட்டாராம்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப வரும் எல்லா வாய்ப்புகளையும் அள்ளிப்போட்டு வருகிறாராம் சினேகா. வயதானாலும் சில நடிகைகள் ரசிகர்களின் மனதை விட்டு நீங்க மாட்டார்கள். அந்த வகையில் புன்னகை அரசி சினேகாவுக்கு நிரந்தர இடமுண்டு. இப்போதும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு தளதளவென இருக்கிறாரே.

தற்போது அம்மாவையே ஓரம் கட்டும் அளவுக்கு நெடுநெடுவென வளர்ந்து வருகிறார் அவரது மகள் ஆதன்யா. பார்ப்பதற்கு சிறு வயது சினேகா போலவே இருக்கும் புகைப்படம் செம வைரல்.

sneha-daughter-aadhanya-photo
sneha-daughter-aadhanya-photo
- Advertisement -spot_img

Trending News