வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

54 வயது வர முரட்டு சிங்கிளாக இருப்பதற்கு இதான் காரணம்.. வியக்க வைத்த SJ சூர்யாவின் பதில்

எஸ் ஜே சூர்யா முதலில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவுக்கு வந்துள்ளார். ஆனால் அப்போது இவருக்கு படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காததால் இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆரம்பித்தார். அதன்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறையில் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.

பின்பு முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தார். அதன் மூலம் வந்த வருமானத்தை வைத்து தன்னுடைய படத்தில் கதாநாயகனாக நடித்து அதன்மூலம் தனது ஆசையை நினைவாகி கொண்டார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் இயக்கி வந்தார்.

Also Read: இப்படியே போனா வேலைக்காகாது.. மீண்டும் பழைய அஸ்திரத்தை கையிலெடுத்த SJ சூர்யா

சமீபத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு எஸ் ஜே சூர்யா சிறு வயதில் காதலித்தேன் அது சில வருடங்கள் கழித்து மறைந்துவிட்டது. மேலும் முடிந்து விஷயத்தை நான் என்றும் யோசித்தது கிடையாது என வெளிப்படையாக கூறியுள்ளார்.

தற்போது முரட்டு சிங்கிளாக இருந்தால் மட்டும்தான் சந்தோசமாக இருக்க முடியும் இப்பொழுது நான் சிங்கிளாக சந்தோசமாக இருக்கிறேன். மேலும் தற்போது தனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அதனால் இனிமேல் தனது முழு கவனத்தையும் சினிமாவின் பக்கம் செலுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.

Also Read: ஷேர் கேட்காதீங்க! SJ சூர்யாவை வைத்து சம்பாதித்த சிவகார்த்திகேயன்

மேலும் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது தற்போது உண்மையில்லை எனவும் அதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்க தனக்கு நேரம் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் கூடிய விரைவில் ஒரு முன்னணி நடிகரை வைத்து படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதாவது தன்னிடம் ஒரு சிறந்த கதை இருப்பதாகவும் அது முன்னணி நடிகர்களிடம் கூறியுள்ளதாகவும் அவர்கள் தற்போது சில படங்கள் நடித்து வருவதால் தனக்கு கால்ஷீட் கொடுத்தவுடன் படத்தை இயக்கி இருப்பதாகவும் இதன் மூலம் நீண்ட வருடத்திற்கு பிறகு தன்னுடைய இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட வெற்றியை கொடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Also Read : எஸ் ஜே சூர்யா எடுத்த அவசர முடிவு.. சம்பளத்தில் கைவைத்த தயாரிப்பாளர்

- Advertisement -

Trending News