விஷாலுக்கு வில்லனாக நடிக்க சம்பளத்தை உயர்த்தி SJ சூர்யா.. 108 கோடி வசூல்னா சும்மாவா

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் மாநாடு. இப்படம் சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சிம்புக்கு அடுத்தபடியாக மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யாவின் சிறப்பான நடிப்பிற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

எஸ்.ஜே.சூர்யா நடித்த இறைவி, மான்ஸ்டர், மெர்சல், ஸ்பைடர், நெஞ்சம் மறப்பதில்லை தொடங்கி மாநாடு வரை அவரது அண்மைக்கால படங்கள் எல்லாம் ரசிகர்களாலும், திரையுலகினராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் விஷாலின் 33 படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படம் ஒரு பான் இந்தியா ஆக்ஷன் என்டர்டெய்னராக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் விஷால் நடித்த எதிரி படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோஸ் எல்எல்பியின் வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கிறார் .

விஷால் 33 படத்தில் வில்லனாக நடிப்பதற்கு எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக எஸ் ஜே சூர்யாவுக்கு 6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத அட்வான்ஸ் தொகை 3 கோடியே எஸ் ஜே சூர்யாவுக்கு கொடுத்துவிட்டார்களாம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு படத்திற்கு எஸ் ஜே சூர்யா 4 கோடி சம்பளம் பெற்றுள்ள நிலையில் அடுத்த படத்திற்கு 2 கோடி அதிகமாக 6 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது எஸ் ஜே சூர்யாவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

இதனால் எஸ் ஜே சூர்யாவுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுத்து, தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக பல தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். மாநாடு படம் 108 கோடி வசூலைத் தாண்டியதால் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது சம்பளத்தை உயர்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sj-suriya-cinemapettai
sj-suriya-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்