Connect with us
Cinemapettai

Cinemapettai

sk

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கர்ப்பமாக இருக்கிறாரா சிவகார்த்திகேயன் மனைவி? சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம்

தமிழ் சினிமாவை பொருத்தவரை மிக சீக்கிரத்தில் வளர்ந்த நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் தன்னுடைய எஸ்கே புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். மேலும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

முதலில் மார்ச் 26-ம் தேதியும் டாக்டர் படம் வெளியாகப் போவதாக படக்குழுவினர் அறிவித்து விட்டு பின்னர் எலக்சன் சூழ்நிலைகளை காரணம் காட்டி மே மாதம் 13ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இன்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தியுடன் வாக்களிக்க வந்தார். அப்போது அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அந்த புகைப்படங்களை தற்போது இணையதளங்களில் ரசிகர்கள் பரபரப்பாக பரப்பி வருகின்றனர். சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குட்டி சிவகார்த்திகேயன் விரைவில் வீட்டிற்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அவரது மனைவி ஆர்த்தி மிகவும் பொறுமையாக நடந்து வந்தது, அவருடைய தோற்றம் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

sivakarthikeyan-wife-arthi-01

sivakarthikeyan-wife-arthi-01

Continue Reading
To Top