வசூலில் வேட்டையாடும் டான்.. வெற்றியை தந்தைக்கு அர்ப்பணித்த சிவகார்த்திகேயன்

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகியுள்ள டான் படம் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் தந்தை மகனுக்கு இடையேயான பிணைப்பை உணர்ச்சிகரமாக கூறியிருந்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது டான் படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் டான் படத்தின் வெற்றிக்கு படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இப்படத்தின் வெற்றியை தனது அப்பாவிற்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் தற்போது டான் படகுழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தன்னுடைய முதல் படமே 100 கோடியை தாண்டி வசூல் செய்ததால் மகிழ்ச்சியில் உள்ளார். மேலும் இதே வெற்றிப் பாதையில் தான் தொடரவேண்டும் எனவும் கூறியுள்ளார். உலகம் முழுவதும் டான் படம் 100 கோடி வசூலைத் தாண்டி எனது கனவை நினைவாக்க உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் படங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் தற்போது தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்ந்து உள்ளது.

மேலும் சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கயுள்ளார். இதைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -