OTT-யிடம் சரண்டர் ஆன சிவகார்த்திகேயன்.. காத்திருந்து காத்திருந்து காலம் போனதுதான் மிச்சம்

அகல கால் வச்சா கூட தப்பிச்சரலாம் ஆனால் ரொம்ப அகலமா கால வச்சா கொஞ்சம் கஷ்டம்தான். அப்படி வச்சிதான் சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைக்க போராடிட்டு இருக்காரு. அதுக்கு கிடைக்குற கேப்ல கிடா வெட்டுனாதான் உண்டு.

படத்தை தயாரித்தால் பலபேருக்கு வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும் அதே நேரம் நம்ம கடனும் கொஞ்சம் சரி ஆகும்னு நினைச்சிட்டு இருந்த மனுஷனுக்கு வந்த சோதனைதான் கொரானா. கோவிட் ல பாதிக்கப்பட்டவங்க லட்சகணக்கான பேரு இருக்காங்க ஆனா இவங்கலாம் கொஞ்சம் பெரிய கடன்காரங்க. ஆமா பல கோடிகள் அதுக்கான வட்டிகள் என பெரிய சோதனைதான்.

ஏற்கனவே அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கனா படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கொஞ்சம் கடனை அடைத்தார். அடுத்து ரியோ நடிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரித்திருந்தார். இதற்கு வரவேற்பு ஓகே ஆனால் வசூல் பெரிதாக வரவில்லை.

அடுத்தது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் வாழ். அருவி படத்தின் இயக்குனர் அருண்பிரபு டைரக்ட் செய்து உள்ளார். படத்தை என்னமோ 2019 லையே முடிச்சி யு/ஏ சான்றிதழை வாங்கிட்டாங்க. இந்த படத்தை அப்பவே ரிலீஸ் பண்ண வேண்டியது கிரகம் இந்த கொரோனா வந்து கெடுத்துவிட்டு போச்சி.

sivakarthikeyan
sivakarthikeyan

இப்ப வேற வழியே இல்லாம ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்து உள்ளனர். வாழ் படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் வாங்கிட்டாங்கலாம். விரைவில் வாழ் படம் குறித்து தகவல்கள் வரும்னு சொல்றாங்க.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்