
தமிழ் சினிமாவில் வெளிவந்த சரித்திர திரைப்படங்களில் இன்றும் பலராலும் பேசப்படும் திரைப்படம் என்றால் அது சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தான்.
1959ஆம் ஆண்டு பிஆர் பந்துலு இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். இந்த திரைப்படத்தை இன்று தொலைக்காட்சியில் பார்த்தாலும் சிலிர்த்துப் போகும்.
அதிலும் சிவாஜி கணேசன் பேசும் ஒவ்வொரு வசனமும் இன்றும் பலருக்கும் நினைவிருக்கும். சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனாகவே வாழ்ந்திருப்பார். பலருக்கும் சிவாஜி கணேசன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த அளவுக்குச் வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருந்தார் சிவாஜி கணேசன். ஆனால் முதன் முதலில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எம்ஜிஆருக்கு தான் கிடைத்ததாம்.
சிவாஜி கணேசனின் உணர்ச்சிபூர்வமான வசனங்கள், உடல் மொழி அனைத்தும் எம்ஜிஆருக்கு செட்டாகுமா என்றால் சந்தேகம்தான். இருந்தாலும் அவரையும் இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாக மாட்டார் என்று சொல்ல முடியாது.
எம்ஜிஆர் தனக்குரிய பாணியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருப்பார். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் யாருக்கு பொருத்தமாக இருந்தது என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம்.
