ரீமேக் ஆகப்போகும் சிவாஜியின் வரலாற்றுக் காவியம்.. அவர் அளவுக்கு யாராலும் நடிக்க முடியாது!

தமிழ் சினிமாவில் தன்னுடைய கம்பீரக் குரலால், அசத்தல் நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இன்றும் கூட அவருக்கு இணையாக யாரும் நடிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு காலத்தால் மறக்க முடியாத மாமனிதர்.

அப்படிப்பட்ட பேரும், புகழும் கொண்ட சிவாஜி கணேசன் வரலாற்று சிறப்புமிக்க பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்தார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

இந்த வரிசையில் அவர் நடித்த கர்ணன் திரைப்படம் ரசிகர்களால் பெரும் அளவில் ரசிக்கப்பட்டது. பாண்டவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரு வில்லன் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டது தான் இந்த கர்ணன் கேரக்டர். அப்படிப்பட்ட கர்ணனுக்குள் இருக்கும் நல்ல விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் கர்ணன்.

இந்த திரைப்படத்தில் கர்ணனாக நடித்த சிவாஜியின் நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதிலும் சிவாஜி கணேசன் உயிர் நீக்கும் அந்த இறுதிக்காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

மீண்டும் ஒரு காவியமாக உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தை ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சிவாஜி கணேசன் நடித்த அந்த கர்ணன் கேரக்டரில் நடிகர் விக்ரம் அல்லது அரவிந்த்சாமி இருவரில் ஒருவர் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த கர்ணன் திரைப்படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் இப்படத்தை ரீமேக் செய்தாலும் சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்