ஓவர் அலப்பறை கொடுத்து கடுப்பாக்கும் பிரபலம்.. அஷ்வின் நிலமை வராம இருந்தா சரிதான்

சின்னத் திரையில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் தற்போது சினிமாவிலும் அதிக அளவில் கால் பதித்து வருகின்றனர். அதிலும் விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் பலரும் தற்போது பெரிய திரையில் ஒரு நல்ல நிலைமையில் இருக்கின்றனர். அந்த வரிசையில் வந்தவர்கள்தான் சந்தானம், சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர் எல்லாம்.

இவர்களை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருந்த அஸ்வின், புகழ் ஆகியோரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். அதில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட அஸ்வின் தன்னுடைய அதிகப் பிரசங்கித்தனமாக பேச்சாலும், நடவடிக்கையாலும் பல சர்ச்சைகளை சந்தித்தார்.

அவரை தொடர்ந்து அடுத்த சர்ச்சையில் தற்போது அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி சிக்கியுள்ளார். இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.

அதில் இவருடைய சின்ன சின்ன சேட்டைகளும், வெகுளித்தனமாக பேச்சும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. இன்றளவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் இவர் அஸ்வின் மற்றும் புகழுடன் சேர்ந்து அடித்த லூட்டி ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலமானது.

அதைத் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைத்தது. தற்போது இவர் டான், காசேதான் கடவுளடா, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருவதால் அவருடைய நடவடிக்கைகளும் மாறி விட்டதாக தெரிகிறது.

முன்பெல்லாம் ஏதாவது கடை திறப்பு விழாவிற்கு இவரை அழைத்தால் உடனே ஒப்புக் கொள்வாராம். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. இப்போது இவர் கடை திறப்பு விழாவிற்கு வர வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என்று கேட்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் இவரிடம் தங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று யாராவது கேட்டால் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறாராம். முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பு நிறுவனம், ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் இப்படிப்பட்டவர்களின் படங்களில் தான் நடிப்பேன் என்று கறாராக கூறுகிறாராம்.

இதனால் அதிர்ந்து போன பலரும் ஏன் என்று கேட்டால் நான் இப்போது பெரிய செலிபிரிட்டி என்று கூறுகிறாராம். நடித்த முதல் படமே வெளியாகவில்லை அதுக்குள்ள இவ்வளவு அலப்பறையா என்று இவரைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர். மேலும் இப்படித்தான் அஸ்வின் ஓவராக ஆட்டம் போட்டு தற்போது அடங்கி போய் இருக்கிறார். அவரின் நிலை இவருக்கு வராமல் இருந்தால் சரிதான் என்றும் கிசுகிசுக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்