ஒவ்வொரு நாளும் நரக வேதனையில் இருக்கும் சிம்ரன்.. இப்படி ஒரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது

தமிழ் திரையுலகின் 90-களில் விஜய், அஜித், சூர்யா முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். இரண்டு மொழிகளிலும் முன்னணியில் இருந்த அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார்.

இவரின் செல்வாக்கின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் இவருடைய தங்கை மோனல். 2001ஆம் ஆண்டு வெளியான பார்வை ஒன்றே போதுமே படத்தில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து தெலுங்கிலும் தமிழிலும் சில படங்களில் ஒப்பந்தமானார்.

குறிப்பாக 2002ஆம் ஆண்டு விஜய் நடித்த பத்ரி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சரத்குமாருடன் சமுத்திரம், சத்யராஜுடன் விவரமான ஆளு, பிரபு மற்றும் பிரபு தேவாவுடன் சார்லி சாப்ளின் போன்ற படங்களில் குறுகிய காலத்திற்குள் நடித்து முடித்தார். மேலும் பத்ரி படம் வெளியான பிறகு படங்களில் நடித்து வரும் போதே 2002ஆம் ஆண்டே  தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தற்கொலை செய்துக்கொண்ட போது இவருடைய வயது வெறும் 21. இவர் இறந்த தற்போது 20 வருடங்கள் கடந்துள்ளது. இவருடைய தற்கொலை அப்போது சினிமா துறையில் மிகப்பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது. இந்நிலையில் தற்போது நடிகை சிம்ரன் தனது தங்கையும் நடிகையுமான மோனல் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “நீ இப்போது என்னுடன் இல்லை, ஆனால் எனக்கு தெரியும் நாம் எப்போதும் ஒன்றாக தான் இருக்கிறோம் என்று, 20 வருடங்கள் கடந்தாலும், என்னுள் கொஞ்சம் நீ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய். நாங்கள் அனைவரும் உன்னை எப்போதும் மிஸ் செய்கிறோம், மோனு” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் சிம்ரன்.

மோனல் இறந்ததற்கு காரணமாக சிம்ரன் 2002 ஆம் மே மாதத்தில் நடன இயக்குனரான பிரசன்னா சுஜீத்தை சாடினார். மோனலும், சுஜீத்தும் காதலித்து வந்ததாகவும் அவர் கூறி மோனல் தற்கொலை செய்து கொண்ட சில நாட்களுக்கு முன்னர் தான் இருவரும் பிரிந்தாகவும் கூறினார்.

simran monal
simran monal

ஆனால் அந்த வழக்கில் ஆதாரம் ஏதும் இல்லாததால் பிரச்சனா சுஜுத்திற்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. அவர் இப்பொழுதும் மலையாள படங்களில் நடன இயக்குனராக தொடர்கிறார். சிம்ரன் 2004ஆம் ஆண்டு திருமணத்திற்கு பின்னர் கொஞ்ச காலம் சினிமாவிலிருந்து விலகி 2008ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் வெற்றிகரமாக ரீ என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் கூட ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்