அப்போதைய காலகட்டத்தில் இருந்த தற்போதுவரை இரு நடிகர்களிடம் எப்போதுமே போட்டி நிலவி வருகிறது. எடுத்துக்காட்டாக எம்ஜிஆர், சிவாஜி அதற்கடுத்தபடியாக ரஜினி, கமல் இதை தொடர்ந்து தற்போது விஜய், அஜித் ரசிகர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.
இவர்களுக்கு அடுத்த தலைமுறையான தனுஷ், சிம்பு இருவரிடமும் தற்போது கடுமையான போட்டி நிலவி வருகிறது. தனுஷ் தன்னுடைய இளவயதிலேயே சினிமாவில் நுழைந்து தற்போது அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் சிம்பு தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே சினிமாவில் நடிக்க வந்தவர்.
சிம்பு ஆரம்பத்தில் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த நிலையில் நடுவில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது. மேலும் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார். இதனால் ஒரு ஹிட் படம் கொடுக்க முடியாமல் பல வருடங்கள் தவித்து வந்த சிம்புக்கு மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற பல படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் கோலிவுட் சினிமாவைத் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடைய நடிப்பை மெருகேற்றி படங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தனுஷ் ஆடுகளம் மற்றும் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
தற்போது சிம்புவும், தனுஷுக்கு சளைத்தவர் நான் இல்லை என படங்களில் பல கெட்டப்புகள் போட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. இருந்தும் தனுசை போல் தனக்கு தேசிய விருது இன்னும் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் உள்ளாராம் சிம்பு.
மேலும் சினிமாவில் தனக்கு பிறகு வந்த தனுஷ் தேசிய விருது வாங்கிய போது தானும் கண்டிப்பாக வாங்குவேன் என்ற விடா முயற்சியில் கடுமையாக உழைத்து வருகிறாராம் சிம்பு. மேலும், தற்போது பல படங்கள் சிம்புக்கு வரிசையாக இருப்பதால் கண்டிப்பாக தேசிய விருதை தட்டிச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.