வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளார்.
சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு உட்பட மாநாடு படத்தில் பணிபுரிந்த 300 பேருக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை சிம்பு பரிசாக வழங்கியுள்ளார். இதனால் படக்குழுவினர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள சிம்பு மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சிம்பு புதிதாக மேலும் சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்பு – யுவன் காம்போவில் வெளிவந்த தப்பு பண்ணிட்டேன் ஆல்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.