நான்கு நாட்களில் இத்தனை கோடியா.! டாக்டர் படத்தை ஓவர் டேக் செய்யுமா மாநாடு?

doctor maanaadu
doctor maanaadu

சிம்புவின் திரைவரலாற்றில் இப்படி ஒரு சாதனையை அவர் படங்கள் செய்ததே இல்லை எனும் அளவிற்கு பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது மாநாடு படம். முதல் முறையாக சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள மாநாடு படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், , எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் மட்டுமல்லாமல் படத்தில் நடித்துள்ள நடிகர்களும் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்கள். டைம் லூப் பாணியில் உருவாகியுள்ள மாநாடு படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் மாநாடு படம் முதல் நாள் 6 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 14 கோடி ரூபாயும், மூன்றாம் நாள் 22 கோடி ரூபாயும் வசூல் செய்த நிலையில் தற்போது நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை சிம்பு படங்கள் பாக்ஸ் ஆபிஸில் இப்படி ஒரு வசூலை செய்ததே கிடையாதாம்.

அதுமட்டுமல்ல டாக்டர் படத்தை விட மாநாடு படம் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டாக்டர் படம் ஒட்டுமொத்தமாக 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

இந்நிலையில் டாக்டர் படத்தின் முதல் நாள் வசூலை விட பல லட்சங்கள் அதிகமாக மாநாடு’ படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாநாடு படத்தின் முதல் நாள் வசூலை விட ஞாயிற்றுக்கிழமையான நேற்று வசூல் அதிகமாம். வார இறுதி நாட்கள் என்பதால் அதிக வசூல் கிடைத்துள்ளது.

இந்த நிலை இப்படியே நீடித்தால் நிச்சயம் டாக்டர் படத்தை விட அதிக வசூல் பெற்று புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு வெளிவராமல் தடுத்துவிட்டனர் இல்லையென்றால் அண்ணாத்த படத்திற்கும் போட்டியாக களம் கண்டிருப்பார் சிம்பு.

Advertisement Amazon Prime Banner