சிம்பு ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்.. ரெண்டு பட வெற்றியால் தனுஷை ஓவர்டெக் செய்த எஸ் டி ஆர்

நடிகர் தனுசுக்கு முன்னரே சினிமாவில் சிம்பு நுழைந்தாலும் நடுவில் தொடர் பிளாப் படங்களால் மார்க்கெட்டை இழந்தார். அந்தச் சமயத்தை சாதுரியமாக பயன்படுத்திக் கொண்ட தனுஷ் தொடர் ஹிட் கொடுத்து மார்க்கெட்டை எகிற செய்து விட்டார். அதுமட்டுமின்றி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

இதனால் தனுஷின் சம்பளம் ஓரளவு உயர்ந்தது. இந்த சூழலில் மாநாடு படத்திற்கு சிம்பு 8 இருந்து 10 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார். ஆனால் மாநாடு படம் கொடுத்த மாபெரும் வெற்றியால் தனது சம்பளத்தை அதிகபடியாக உயர்த்தி விட்டார். அதாவது மாநாடு படம் வெளியாவதற்கு முன்பே சிம்பு தயாரிப்பாளர் ஐசாரி கணேஷ் உடன் ஒப்பந்தம் போட்டு இருந்தார்.

Also Read : செஞ்சா உங்கள வச்சு தான் சம்பவம் செய்வேன்.. நித்யா மேனனுக்காக 5 வருடம் காத்துக் கிடக்கும் தனுஷ்

அதாவது தொடர்ந்து மூன்று படங்களுக்கு குறிப்பிட்ட தொகையை தருவதாக ஐசரி கணேஷ் கூறியிருந்தார். ஆனால் மாநாடு வெற்றியால் சிம்பு தனது சம்பளத்தை அதிகப்படியாக உயர்த்தி விட்டார். இதனால் தயாரிப்பு தரப்பு இடம் பேச்சுவார்த்தையும் நடத்தி இருந்தார்.

கடைசியாக சொன்ன தொகையை விட வெந்து தணிந்தது காடு படத்திற்கு அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக கமலின் ராஜ் கமல் நிறுவனத்திற்கு சிம்பு ஒரு படம் பண்ணுகிறார். இதற்காக கிட்டத்தட்ட 25 கோடி சம்பளம் சிம்பு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : செல்வராகவனை நம்பி பிரயோஜனம் இல்ல.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் தனுஷ்

கிட்டத்தட்ட தனுஷின் சம்பளமும் இப்போது இதுவாக தான் உள்ளது. ஆனால் தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ள படங்களுக்கு 40 கோடி சம்பளம் கேட்டு வருகிறார். மேலும் சிம்பு மற்றும் தனுஷ் இருவருமே ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதாவது தங்களது படங்கள் 100 கோடி பட்ஜெட்டுக்கு கீழ் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

அவ்வாறு 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தால் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாகவும் தனுஷ், சிம்பு இருவருமே தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார்கள். ஆகையால் அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக கோலிவுட் சினிமாவில் தனுஷ், சிம்பு இருவருக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

Also Read : மொத்தமாய் உருமாறி இருக்கும் சிம்பு.. ஒரே ஒரு பிரச்சனையால் மாட்டி தவிக்கும் பரிதாபம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்