மாநாடு படத்தின் 100 கோடிக்கு விழுந்த வேட்டு.. எங்க போனாலும் நடுவுல குழிய வெட்டுரானுங்களே

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. அதனால் சிம்பு ரசிகர்கள் சிம்பு மீண்டும் திரும்பி வந்து விட்டார் என மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.

மாநாடு படம் வெளிவந்தபோது திரை பிரபலங்களும் இப்படத்தை தான் பெரிய அளவில் பேசி வந்தனர். அதற்கு காரணம் மாநாடு படத்திற்கு கிடைத்த வரவேற்பு தான் ஆனால் ஒரு சிலர் மாநாடு படம் சிம்புவின் வாழ்க்கையில் முக்கிய படம் எனவும் இதுவரை சிம்புவின் படங்கள் செய்யாத சாதனையை மாநாடு படம் செய்ததாகவும் கூறி வந்தனர்.

அதாவது குறுகிய நாட்களிலேயே 100 கோடி வசூல் சாதனை படைத்ததாக படக்குழுவினர் வெளிப்படையாக கூறிவந்தனர். வெங்கட் பிரபுவும் இதனை பல பேட்டிகளில் பெருமையாக பேசி வந்தார். ஆனால் தற்போது மாநாடு படம் 100 கோடி வசூல் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

எந்த ஒரு படமும் 100 கோடி வசூல் சாதனை படைக்க வேண்டும் என்றால் அந்த படத்தின் வரி இல்லாமல் வசூல் சாதனை படைக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் அந்த படம் 100 கோடி வசூல் சாதனை பட்டியலில் இடம்பெரும்.

மாநாடு படம் 100 கோடி வசூல் சாதனை படைத்தது. ஆனால் வரியுடன் சேர்த்து தான் 100 கோடி வசூலை பெற்றது. இதில் படத்தின் வசூலில் இருந்து 30% வரியை அரசாங்கத்திற்கு கட்ட வேண்டும். அப்படிப் பார்த்தால் மாநாடு படம் 110 கோடி வசூல் சாதனை படைத்தது 30% வரிவசூல் போனால் 80 கோடி தான் மாநாடு படம் வசூல் சாதனை படைத்துள்ளது.

ஆனால் படக்குழுவினர் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக ரசிகர்களிடம் தெளிவாக கூறாமல் 100 கோடி வசூல் பெற்றதை மட்டும் கூறி மாநாடு படம் வெற்றி பெற்றதாக கூறினர். தற்போது இப்படத்தின் உண்மை வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்