
சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் சினிமாவிலிருந்து சீரியலுக்கு சென்ற நடிகைகளும் உள்ளனர். அந்த வகையில் சினிமாவில் நினைத்த அளவு வரவேற்பு கிடைக்காததால் சீரியலில் நடித்து வருகிறார் நடிகை ஸ்ரித்திகா.
ரம்யா கிருஷ்ணன் நடித்த கலசம் என்ற சீரியலில் சப்போர்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஸ்ரித்திகா. இவர் தமிழில் மதுரை டூ தேனி என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். அதுமட்டுமில்லாமல் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.
சினிமாவில் கிடைக்காத வரவேற்பு இவருக்கு சீரியலில் கிடைத்தது. அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
மேலும் தமிழ் சினிமாவில் உள்ள டிவி சேனல்கள் அனைத்திலும் பணியாற்றிய ஒரே நடிகை இவர்தான். எல்லா டிவி சேனல்களிலும் குறைந்தது ஒரு சீரியலாவது நடித்துள்ளார். கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான குல தெய்வம் என்ற சீரியலில் நடித்து வந்தார்.

அந்த சீரியல் முடிவுற்ற பிறகு கடந்த வருடம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து தன்னுடைய தொடை அழகை காட்டும் வகையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் ஸ்ரித்திகா.

சீரியலில் சேலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்த நம்ம குடும்ப குத்துவிளக்கு ஸ்ரித்திகாவா இது என ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.