சூப்பர் ஹிட் ரீமேக் படத்தை நம்பி களம் இறங்கும் சாந்தனு.. கரை சேர்வாரா?

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் வாய்ப்புகளை இழந்து கடைசிவரை ரசிகர்களால் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்களும் முன்னாள் இயக்குனர் மற்றும் நடிகரின் மகன் சாந்தனு பாக்யராஜ்.

இவ்வளவு ஏன் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக வலம் வரும் ஜெய்க்கு அடையாளம் கொடுத்த படமாக அமைந்த சுப்பிரமணியபுரம் படத்தில் கூட அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சாந்தனு தான் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டு தன்னுடைய தந்தையால் அறிமுகமாகி தற்போது வரை தனக்கென ஒரு இடம் கிடைக்காமல் தடுமாறி விழுகிறார். சமீபத்தில் நடித்த மாஸ்டர் படத்திலும் இவரது கதாபாத்திரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

மாறாக இவரை அனைவருமே கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டனர். இப்படி தடுமாறிக் கொண்டிருந்த சாந்தனு அடுத்தடுத்து முருங்கைக்காய் சிப்ஸ், ராவண கூட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் தனக்கு நல்ல திருப்பு முனையாக அமையும் எனவும் நம்புகிறாராம்.

அதனைத் தொடர்ந்து கன்னட சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பீர்பால் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளாராம். இந்த படமும் தனக்கு வெற்றி கொடுக்கும் என நம்புகிறார்.

2019 ஆம் ஆண்டு வெளியான பீர்பால் படம் கன்னட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தெலுங்கில் ரீமேக் ஆகி கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

birbal-movie
birbal-movie
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்