ராம் சரணுக்கு 2 கதாநாயகிகளை ஜோடியாக்கும் ஷங்கர்.. ஃப்ளாஷ்பேக் இவங்க தான் கரெக்ட்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தன்னுடைய 50-வது படத்தை தெலுங்கு முன்னணி நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரணை வைத்து இயக்கப் போகிறார். இந்தப்படம் ராம்சரணுக்கு 15-வது படமாகும். ராம்சரண்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே ராம் சரண் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து ராம்சரண் தன்னுடைய தந்தை சிரஞ்சீவியுடன் நடித்து சமீபத்தில் வெளியான ஆச்சார்யா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இப்படி ஏற்ற இறக்கத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் ராம்சரணின் அடுத்த படத்தை இயக்கும் ஷங்கர், அந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் தரை இறக்கி உள்ளார். இந்தப் படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிப்பதால் ஒரு வேடத்திற்கு ராம்சரணுடன் கியாரா அத்வானி ஜோடியாக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

தற்போது இரண்டாவது வேடத்திற்கு ஜோடியாக ராம்சரணுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேரப்போகிறார். இந்தப் படம்தான் ஷங்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ராம்சரணுடன் முதல் முதலாக கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்கிறார்.

அந்தப் படத்தின் கதையில் பிளாஷ்பேக் காட்சியில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதால், இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் படத்தில் இணைந்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு பிளாஷ்பேக்கில் வரும் சிறிய பீரியட் காட்சிகளில் ராம்சரணுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

புத்தம்புது கம்போவில் உருவாக இருக்கும் இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் எ ன்றும், கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -