ஆசையாசையாய் நடித்த படம் இப்படி ஆயிருச்சே.. வருத்தத்தில் செல்வராகவன்

இயக்குனராக பல்வேறு படங்களை இயக்கிய செல்வராகவன் முதன்முறையாக நடிகராக களம் இறங்கியுள்ள திரைப்படம் சாணிக் காகிதம். இந்த படத்தில் செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்தது. அடுத்த நாளே படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டாராம் செல்வராகவன். அந்த அளவுக்கு சாணிக் காகிதம் படம் அவருக்கு பிடித்துள்ளதாம்.

மேலும் இந்த படத்தின் வெளியீட்டை ரசிகர்களும் பெருமளவு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார்.

இன்றிலிருந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் கண்டிப்பாக இனி வாராவாரம் புதிய படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் தியேட்டர்கள் திறந்த பிறகும் அனைத்து படங்களும் ஒடிடி தளங்களுக்கு செல்கின்றன.

அதிலும் செல்வராகவனை நடிகராக திரையில் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது சாணிக் காகிதம் படம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது. தான் நடித்த முதல் படத்தை தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நினைத்திருந்த செல்வராகவனுக்கு இந்த செய்தி சோகத்தை கொடுத்துள்ளதாம்.

இருந்தாலும் விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் அந்த படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் செல்வராகவன் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்