Connect with us
Cinemapettai

Cinemapettai

the-legend-annachi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்த மரண அடிக்கு ரெடியான லெஜெண்ட் அண்ணாச்சி.. மீசை, தாடி என மாறிப்போன வைரல் புகைப்படம்

எப்போதுமே முகம் முழுவதும் முழு மேக்கப்புடன் மீசை இல்லாமல் இருக்கும் அண்ணாச்சி இப்படி ஒரு கெட்டப்பில் இருப்பது பார்ப்பவர்களை கொஞ்சம் பதற தான் வைக்கிறது.

சரவணா ஸ்டோர்ஸ் என்ற மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதியான சரவணன் அண்ணாச்சி கடந்த வருடம் தி லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஏற்கனவே அவர் தன் கடையின் விளம்பர படங்களில் நடிப்பது ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானது. அதில் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் அவர்கள் சும்மாவா விடுவார்கள்.

அந்த வகையில் தி லெஜெண்ட் திரைப்படம் சோசியல் மீடியாவில் மரணமாக பங்கம் செய்யப்பட்டது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அண்ணாச்சி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பேன் என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் அண்ணாச்சியின் அடுத்த அவதாரம் என்னவாக இருக்கும் என்ற விவாதத்திலும் இறங்கினார்கள்.

Also read: இந்த 5 ஹீரோக்களை கலாய்க்கவே தியேட்டருக்கு சென்ற இளசுகள்.. நம்பர் ஒன் இடத்தை பிடித்தது லெஜெண்ட் அண்ணாச்சி

அதிலும் அண்ணாச்சி சமீபத்தில் காஷ்மீரில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட போது அவர் விஜய்யுடன் நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்தது. தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அதற்காக காஷ்மீரில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனாலேயே ரசிகர்கள் இந்த இரு சம்பவங்களையும் ஒன்றிணைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ஆனால் அது எதுவும் உண்மை கிடையாது என்றும் விரைவில் அண்ணாச்சியின் புது பட அறிவிப்பு வெளிவரும் என்றும் திரை வட்டாரங்கள் தெரிவித்தது. அந்த வகையில் தற்போது அன்னாச்சியின் புது கெட்டப் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அண்ணாச்சி தாடி, மீசை என அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார்.

Also read: இப்ப புரியுதா அண்ணாச்சியோட பவர்.. விஜய், அஜித்தை தாண்டி முதல் இடத்தை பிடித்தாரா தி லெஜன்ட்.?

எப்போதுமே முகம் முழுவதும் முழு மேக்கப்புடன் மீசை இல்லாமல் இருக்கும் அண்ணாச்சி இப்படி ஒரு கெட்டப்பில் இருப்பது பார்ப்பவர்களை கொஞ்சம் பதற தான் வைக்கிறது. மேலும் அவர் அப்படி எந்த கேரக்டரில் தான் அடுத்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் இந்த போட்டோ ஏற்படுத்தி இருக்கிறது.

மரண அடிக்கு ரெடியான லெஜெண்ட் அண்ணாச்சி

saravana-stores-annanchi

saravana-stores-annanchi

அந்த வகையில் அவருடைய புது பட அறிவிப்பு இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. அப்படத்திற்காக தான் அவர் தற்போது தன்னுடைய கெட்டப்பை இப்படி ஸ்டைலாக மாற்றி இருக்கிறாராம். இதன் மூலம் அவர் அடுத்த மரண அடிக்கு தயார் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். ஆனால் ரசிகர்கள் இப்போது இந்த போட்டோவையும் சோசியல் மீடியாவில் கலாய்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். இருப்பினும் அண்ணாச்சியின் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Also read: முத்தின பிறகு கடைதெருவுக்கு வந்த கத்திரிக்கா.. ஒரு வழியாக நினைத்ததை முடித்த லெஜன்ட் அண்ணாச்சி

Continue Reading
To Top