Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush samuthirakani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்க மறுத்த தனுஷ்.. 18 வருட ரகசியத்தை போட்டுடைத்த தயாரிப்பாளர்

தமிழில் ஒரு நல்ல படைப்பாளியாகவும் நடிகராகவும் வலம் வருபவர் நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான சமுத்திரக்கனி. குடும்பங்கள் கொண்டாடும் நாயகனில் முதன்மை வகிப்பவர் சமுத்திரக்கனி தான் என்றாலும் மிகையாகாது.

தனுஷ் செல்வராகவன் யுவன் என்கிற காம்போ வெற்றிக்கூட்டணியாக வலம் வந்த தருணம் அப்போது தயாரிப்பாளர் ஞானவேலுவுடன் தான் நாளின் பாதிக்கும் மேற்பட்ட நேரத்தை கழிக்குமாம் இந்த குழு. விளையாடுவதற்கு ஊர் சுற்றுவதற்கு என எப்போதெல்லாம் நேரமிருக்கிறதோ செலவிடுவார்களாம்.

அப்போதைய தருணத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு நடிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வெளியான உன்னை சரணடைந்தேன் படத்திற்கு அழைத்து சென்றாராம் தயாரிப்பாளர் ஞானவேலு.

v gnanavel

v gnanavel

படத்தின் ஒவ்வொரு விடயத்தையும் சீன் விடாமல் ரசித்து முடித்த தனுஷிடம் ஞானவேலு இவரை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்று பேசியதற்கு இம்மாதிரியான படங்கள் எனக்கு சரியாக வராது என்றும் ரசிகர்களை கடந்து நானும் இம்மாதிரியான படங்களை ரசிப்பேன் என்றும் ஆனால் தனக்கு என்கிற கதைக்களம் இப்படத்திற்கு அல்ல என்றும் கூறினாராம்.

இப்போது இருவரும் சினிமாவின் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்றும் அவரவர்களுக்கான பாதைகளில் பயணிக்கிறார்கள் என்றும் கூறினார் தயாரிப்பாளர் ஞானவேலு.

விஐபி படத்தில் தனுஷின் அப்பாவாக நடித்திருந்த சமுத்திரக்கனியை தானும் ரசித்ததாகவும் கூறினார் தயாரிப்பாளர் ஞானவேல்.

Continue Reading
To Top