Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மரணத்தை எதிர் கொண்டிருந்த சமந்தா.. பேட்டியில் மனம் வெறுத்து கூறிய சம்பவம்

சமந்தா, நாக சைதன்யா இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக பல கோடி செலவில் 2017 ல் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து கொண்டு மிகவும் பிஸியாக இருந்தார். நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை திருமணத்திற்கு பிறகு சமந்தா தன் பெயருடன் சேர்த்து இருந்தார்.

திடீரென தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்த அக்கினேனி என்ற பெயரை சமந்தா நீக்கி இருந்தார். இதனால் இவர்களுக்கு விரைவில் விவாகரத்து ஆக போகிறது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே என சமந்தா சொல்லி வந்தார். ஆனால், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நாக சைதன்யாவை பிரிய போவதாக தனது இன்ஸ்டால் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

சமந்தா விவகாரத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார். விவாகரத்துக்கு பிறகு மௌனம் சாதித்து வந்த சமந்தா தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் பிலிம்ஃபேருக்கு பேட்டியளித்த சமந்தா, ஆரம்பத்தில் நான் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்தேன்.

விவாகரத்து பிரிவால் மனம் நொறுங்கி இறந்துவிடுவேன் என்று நினைத்தேன், இவ்வளவு வலிமையானவளாக இருக்க முடியும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. நான் இன்று இவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், நான் இதற்கு முன் இவ்வளவு வலிமையுடையவள் என்பது எனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார்.

சமந்தா ஆரம்பத்தில் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் இந்த அளவுக்கு வந்துள்ளார். பல கஷ்டங்களுக்கு பிறகு முன்னணி நடிகையாக வந்துள்ள சமந்தா, அவருடைய விவாகரத்தால் மன அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு பல வழிகளை தேடி தற்போது படங்களில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

Continue Reading
To Top