Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த அஜித் படத்தை நம்ம ரீமேக் பண்ணலாம், ஹிட்டு வேணும்ல.. சல்மான்கானை கவர்ந்த தல
சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராதே திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளதால் வேறு வழியின்றி தல அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளாராம்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடிப்பில் வெளியாகி சுமார் வெற்றியை கூட பெறாமல் படுதோல்வியை சந்தித்த திரைப்படம்தான் ராதே.
இந்த படம் எடுத்ததற்கு சும்மாவே இருந்திருக்கலாம் என்பது போன்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளிவந்தன. மேலும் இந்த படம் ஒருமுறை பார்ப்பதற்கு ரூ. 249/- கட்டணம் என்ற அடிப்படையில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
தற்போது அடுத்ததாக சல்மான் கான், தான் நடிக்கும் படத்தை வெற்றி படமாக கொடுக்க தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த படங்கள் என்னென்ன என்பதை லிஸ்ட் எடுத்துள்ளார். அதில் அஜித் படத்தை தேர்வு செய்துள்ளாராம்.
2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா மற்றும் அஜித் கூட்டணியில் முதல் முறையாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம்தான் வீரம். இந்த படத்தை ஏற்கனவே இந்தியில் அக்ஷய்குமார் ரீமேக் செய்வதாக இருந்தது.
ஆனால் அவர் அந்த படத்தை கைவிட்டுவிட்டார். அதை பயன்படுத்தி தற்போது சல்மான்கான் வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

veeram-hindhi-remake
