Connect with us
Cinemapettai

Cinemapettai

கொல மாஸ் போஸ்டருடன் வெளியான ருத்ரன் ரிலீஸ் தேதி.. ஒரு பெரிய சம்பவம் இருக்கு!

raghava-lawrance

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொல மாஸ் போஸ்டருடன் வெளியான ருத்ரன் ரிலீஸ் தேதி.. ஒரு பெரிய சம்பவம் இருக்கு!

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் இயக்குனராக உருவெடுத்து தற்போது நடிகராகவும் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படங்களின் மூலம் வசூல் நாயகனாக மாறினார்.

ஆனால் கடைசியாக வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. பார்த்து பார்த்து சலித்து போன திரைக்கதையில் உருவானதால் அந்த படம் பெரிய அளவில் சொதப்பியது. இருந்தாலும் வசூல் 100 கோடி என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இது ஒரு புறமிருக்க தற்போது ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களை தயாரித்த 5 ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ருத்ரன் எனும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக முதல் முறையாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனராக உருவெடுக்கிறார் 5 ஸ்டார் கதிரேசன். இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே சரத்குமார் மற்றும் ராகவா லாரன்ஸ் கூட்டணியில் வெளியான காஞ்சனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக இருந்த கதிரேசன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 2022ல் ருத்ரன் படம் வெளியாக உள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

rudhran-release-announcement-poster

rudhran-release-announcement-poster

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top