அநியாயத்திற்கு தள்ளிப்போன ராஜமவுலியின் RRR.. அப்செட்டில் படக்குழு

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமௌலியின் இயக்கத்தில் அடுத்ததாக ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வந்தது.

இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் நடிகைகளான அஜய் தேவ்கன், ஆலியா பட் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சுதந்திர போராட்ட வீரரின் வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் முதலில் அக்டோபர் 13ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகும் எனவும் அறிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் சில இடங்களில் இன்னமும் தியேட்டர்கள் திறக்கப்படாத சூழ்நிலை உருவாகி உள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிச் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி வந்தனர். ஆனால் இவ்வளவு நாட்கள் தள்ளிப் போகும் என படக்குழுவினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

RRR படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு சென்று விட்டதாம். கிட்டத்தட்ட இன்னும் எட்டு மாதங்கள் இந்த படத்தின் வெளியீட்டுக்காக வெயிட் செய்ய வேண்டிய நிலைமை. அதற்குள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகிய இருவரும் தனித்தனியே நடிக்கும் படங்களும் ரிலீசுக்கு தயாராக இருக்கும்.

இதனால் அவர்களின் அடுத்தடுத்த படங்களின் ரிலீசும் தள்ளிச் செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக படக்குழு மட்டுமல்லாமல் அந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் பெரும் சோகத்தில் இருக்கிறார்களாம்.

RRR-cinemapettai
RRR-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்