துரோகத்தால் வீழ்ந்த ராபின் சிங்.. இந்திய அணியின் லான்ஸ் குளூஸ்னராக மாறிய தருணம்!

மே.இ.தீவுகளில் உள்ள டிரினிடாட்என்ற இடத்தில் பிறந்தவர் ராபின் சிங். இவருடைய முழுப் பெயர் ரொபீந்தர ராம்நரைன் ராபின் சிங். இவர் டிரினிடாடிலிருந்து 1984ஆம் ஆண்டு தனது படிப்பிற்காக சென்னையில் குடிபெயர்ந்தார். சென்னை பல்கலைக் கழகத்தில் பயின்றார்.

ஆரம்ப காலத்தில் டிரினிடாடியுள்ள கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இவர் சென்னையில் குடியேறிய பின் தமிழக அணியில் இடம்பிடித்து ரஞ்சிக் கோப்பையை பெற்றுத்தந்தார். அதன்பின் படிப்படியாக முன்னேறி இந்திய அணிக்குள்ளும் நுழைந்தார். இன்று வரை இந்திய அணிக்குள் எப்படி நுழைந்தார் என்பது ராபின் சிங்கிற்கு ஒரு கனவாகவே இருந்ததாம்.

Robin2-Cinemapettai.jpg
Robin2-Cinemapettai.jpg

1989ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அப்பொழுது இந்திய அணியின் கேப்டனாக இருந்த திலீப் வென்சர்க்கார் இவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கொடுத்தார். அதுவும் ராபின் சிங் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை மறந்து கடைசி ஆளாக களம் இறக்குவதும், பந்து வீசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படாமலும், வீன் செய்துள்ளார்.

Dilip-Vensarkar-Cinemapettai.jpg
Dilip-Vensarkar-Cinemapettai.jpg

அதன்பின் ராபின் சிங், இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்ட பட்டுள்ளார். பின்னர் மீண்டும் ரஞ்சி கோப்பையில் விளையாடி தனது திறமையை நிரூபித்து 7 ஆண்டுக்கு பின்னர் இந்திய அணிக்குள் நுழையும் போது அவருக்கு வயது 33. கிட்டத்தட்ட அவரோட கேரியர் முடியும் காலகட்டத்தில்தான் அணிக்குள் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

இந்த முறை இந்திய அணி சுதாரித்து கொண்டு அவரை நன்கு பயன்படுத்திக் கொண்டது. 33 வயதில் இருந்து ஐந்து வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடி, தனது திறமையை நிரூபித்து பல போட்டிகளை வென்று கொடுத்தார் ராபின் சிங்.

Robin-Cinemapettai.jpg
Robin-Cinemapettai.jpg

மீடியம் பந்துவீச்சாளராகவும், அதிரடி ஆட்டக்காரராகவும் சச்சின் மட்டும் அசாருதீனால் நன்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டார் ராபின் சிங். 1998 ஆம் ஆண்டு தாகா போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 316 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இந்திய அணி உலக சாதனை செய்தது. அதற்கு பெருந்துணையாக இருந்தது ராபின் சிங்.

Robin1-Cinemapettai.jpg
Robin1-Cinemapettai.jpg

இந்திய அணிக்காக விக்கெட்டுகள் எடுத்தும், ரன்கள் அடித்தும், பில்டிங் அடிப்படையில் 20 ரன்களை தடுத்தும், என்பது போன்று பல போட்டிகளை வென்று கொடுத்தார் ராபின் சிங். 2003ஆம் ஆண்டு 37 வயதில் ஆடிக்கொண்டிருந்த ராபின் சிங் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக வருகை தந்த பின் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார். சௌரவ் கங்குலி இந்திய அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் மூத்த வீரர்களை புறக்கணித்தார். இறுதியாக 2004ஆம் ஆண்டு இந்திய அணியின் லான்ஸ் குளூஸ்னர் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ராபின் சிங் ஓய்வு முடிவை அறிவித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்